ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே க.சத்திரம் கிராமத்தில் அமைந்து அருள் பாலித்து வரும் அருள்மிகு ஸ்ரீ அரச மரத்து விநாயகர் அழகு வள்ளி அம்மன் நூதன ஆலயம் ஸ்ரீ வள்ளி தேவசேன சமேத கல்யாண சுப்பிரமணியசுவாமி ஆலய  சுவாமிகளுக்கு ஜுர்னோத்தாரன அதிர்ஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேக பெருவிழா நடைபெற்றது.முன்னதாக யாகசாலை பூஜை கணபதி ஹோமம் விக்னேஸ்வர பூஜை கோமாதா பூஜை நான்காம் கால பூஜை பூர்ணா குதி தீபாதாரணை நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மங்கல இசை வாத்தியங்களுடன் கடம் புறப்பாடு ஆலய வலம்  சென்று விமான கோபுர கலசங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்று.பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து சுவாமிகளுக்கு கும்ப நீர் பால்  தயிர் சந்தனம் இளநீர் பஞ்சாமிர்தம் 16 வகையான மூலிகை திரவிய அபிஷேக அலங்காரம் தீபாதாரணை நடைபெற்றது.பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டதுகும்பாபிஷேக விழாவினை சத்திரம், கடலாடி சாயல்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த ஆயத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைகும்பாபிஷேக நிர்வாக குழு கமிட்டி உறுப்பினர்கள் செய்தனர்.