விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில்  பிரதோஷ விழா நடைபெற்றது  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தளம் அமைந்துள்ள 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி மாத  பிரதோஷ விழாவை முன்னிட்டு  நந்தீஸ்வரருக்கு  பால், தயிர்,சந்தனம், இளநீர்,மஞ்சள், விபூதி, பன்னீர், தேன்,  பஞ்சாமிர்தம்  உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது,முன்னதாக மூலவர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் உட்பட இதர தெய்வங்களுக்கு  சிறப்பு அலங்கார அபிஷேகம் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து செவ்வரளி, மல்லிகை உள்ளிட்ட மலர்களால் மாலை அணிவித்து அலங்காரம் செய்யப்பட்ட நந்தீஸ்வரருக்கு பஞ்சமுக தீபா தாரணை கட்டப்பட்டது.நடைபெற்ற பிரதோஷ விழாவில்  விளாத்திகுளம்   பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.