கமுதி அருகே அய்யனார் சாமிக்கு நெல் விதைகளை படையல் இட்டு பருவ மழை பெய்து மகசூல் கிடைக்க வேண்டி புரவி எடுப்பு விழா கோலாகல கொண்டாட்டம்!ராமநாதபுரம்  மாவட்டம் கமுதி அருகே காக்குடி கிராமத்தில்  அய்யனார் வாழவந்த அம்மன் கருப்பசாமி  தர்ம முனீஸ்வரர் மந்தைப்பிடாரியம்மன் காளியம்மன் சுவாமிகளுக்கு கடந்தாண்டு தங்களது வயல்களில் விளைந்த நெல் மணி விதைகளை படையல் இட்டு இந்த ஆண்டு பருவ மழை பெய்து அதிக மகசூல் கிடைக்க வேண்டி புரவி  எடுப்பு விழா கிராம மக்கள் விவசாயிகள் ஒன்று கூடி கோலாகலமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.நேற்று முன்தினம் பாரம்பரிய கலாச்சார முறையில் அலங்கரிக்கப்பட்ட மாட்டுவண்டிகளில் கொண்டு செல்லப்பட்ட சுவாமிகளுக்கு அழகிய வண்ணமிட்டு கண்கள் திறக்கப்பட்ட சுவாமிகளுக்கு இரண்டு நாள் சிறப்பு பூஜை தீபாதாரணை நடைபெற்றது.அதனைத் தொடர்ந்து காக்குடி கிராமத்தில் இருந்து சிம்லா மேளம் இசைக்கு ஏற்ப நடனமாடி ஆட்டம் பாட்டத்துடன் கோலாகலமாக கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக நகர்வலம் சென்று, பருவ மழை பெய்துஅதிகமாக சொல் கிடைத்திட வேண்டி ஆலயத்திற்கு சாமி சிலைகள் கொண்டு செல்லப்பட்டது.