கமுதியில் கைப்பிடி அரிசி 108 ஆம் ஆண்டு அன்னக் குவியல்
மகேஸ்வர பூஜை ஆன்மீக துறவிகள் உள்ளிட்டோருக்கு மக்களிடம் சேகரித்த கைப்பிடி
அரிசியில் நாள் முழுவதும் அன்னதானம்!
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ராமானுஜ பஜனைமட
ஸ்ரீ கிருஷ்ணன் காமாட்சி ஆலயத்தில் புரட்டாசி மாத 5ஆம் வார சனிக்கிழமை
தினத்தை முன்னிட்டு 108 ஆம் ஆண்டு மகேஸ்வர பூஜையில் ஆன்மீக துறவிகள் உள்ளிட்டோருக்கு சேகரித்த கைப்பிடி
அரிசியில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டது.
கடந்த 1915 ஆம் ஆண்டு
முதல் முன்னோர் காலத்தில் இருந்து கமுதியில் பாரம்பரிய முறையில் புரட்டாசி மாத
சனிக்கிழமைகளில் மக்களிடம் நேரில் சென்று சேகரிக்கப்பட்ட
கைப்பிடி அரிசியில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத ஐந்தாம் வார சனிக்கிழமையில் நடைபெறும் மகேஸ்வர பூஜை இந்த
ஆண்டு 108 ஆம் ஆண்டாக
நடைபெற்றது,
முன்னதாக மலர் மாலை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட அன்ன
குவியலுக்கு சிறப்பு பூஜை தீபாதாரணை நடைபெற்று, அதை பிரசாதமாக மக்களுக்கு அன்னதானமாக
வழங்கப்பட்டது,இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.