தமிழக முழுவதும் திமுக அரசை கண்டித்து பாஜக சார்பில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளில் அப்பகுதிகளிலுள்ள பாஜக நிர்வாகிகள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றுது.

இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பகுதிகளான இளம்புவனம், கான்சாபுரம், கீழ ஈரால் உட்பட பல பகுதிகளில் பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த ஆர்ப்பாட்டத்தின் போது திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி,

•  அனைவருக்கும் பெண்கள் உரிமை தொகை வழங்க வேண்டும்.

பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவு

அத்தியாவசிய பொருட்கள், மின் கட்டணம், சொத்துவரி, வாகனப்பதிவு கட்டணம் மற்றும் பத்திர பதிவு கட்டணம் உயர்வு.

மேகதாது அணை விவகாரம்- உள்ளிட்டவை தொடர்பாக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட  உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் சங்கரலிங்கம் தலைமையில் ஒன்றிய பொதுச்செயலாளர் ஆட்டோ காளிராஜ் முன்னிலையில் நடந்தது இந்த நிகழ்வில் கிளைத் தலைவர் தளவாய்சாமி ஒன்றிய  வழக்கறிஞர் அணி தலைவர் பாலமுருகன் ஊராட்சி மன்ற உறுப்பினர் ஹரிஹரன் மகளிர் அணிநிர்வாகிகள் கலந்து கொண்டுஆர்ப்பாட்டம் சிறப்பாக நடைபெற்றது.