கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் ஆலம்பட்டி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில், அதில் ரூபாய் 2,25,930 மதிப்புள்ள 346 கிலோ மதிப்புள்ள தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி வந்தது தெரியவந்தது, இதனை அடுத்து கடத்தலில் ஈடுபட்ட கோவில்பட்டி கடலைகாரதெருவை சேர்ந்த பூவலிங்கம் மகன் பாண்டிமணி (30), ராமராஜ் மகன் ரகுபதி (29), மந்தித்தோப்பு பகுதியை சேர்ந்த ரஞ்சித்(33) ஆகிய 3 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்த புகையிலை பொருட்கள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.