திருப்பதி, சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரசு எடுக்கப்பட்ட நிலம் மீண்டும் விற்பனை கண்டுகொள்ளாத நிலம் கையகப்படுத்தப்பட்டது
திருப்பதி சென்னை தேசிய நெடுஞ்சாலை (205) நிலம் எடுப்பு மாவட்ட வருவாய் அதிகரி தேசிய நெடுஞ்சாலைக்காக இருபுறமும் விவசாயிகளிடமிருந்து நிலம் கையகப்படுத்தப்பட்டது 2011 ஆம் ஆண்டு திருப்பதியில் இருந்து திருநின்றவூர் வரை இருபுறமும் சாலை அபிவிருத்திக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு அதற்காக இழப்பீடு தொகையும் வழங்கப்பட்டது, இன்று வரை சாலை அபிவிருத்த பணிகள் துரிதமாக நடைபெறாமல் மெத்தனமாக நடைபெறுவதால் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலம் அரசு கணக்குகளில் வருவாய் கணக்குகளில் முறையாக கணக்கு வைக்கப்பட்டு தங்கள் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளாததால் நிலம் தற்போது வரை விவசாயிகளின் பிடியிலே இருந்து வருகிறது எந்த நோக்கத்துக்காக தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் சாலை விரிவாகத்துக்காக எடுக்கப்பட்ட நிலம் சர்வே துறை மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு செய்து சர்வே துறை வருவாய் துறை கொண்டு தங்கள் எல்லை பகுதியை நிர்ணயம் செய்து கொண்டு வருவாய் கணக்குகளில் வரவு வைக்காமல், இன்றுவரை நிலம் கையகப்படுத்தப்பட்டு பணம் வழங்கப்பட்டும் இன்றுவரை விவசாயமே இருந்து வருவதால் விவசாயிகள் அந்த நிலத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு மீண்டும் விற்பனை செய்வதும் மீண்டும் தங்கள் வசம் கையகப்படுத்திக் கொண்டு வெவ்வேறு காரணங்களால் பயன்படுத்தி வருவதால் நிலம் கையகப்படுத்தப்பட்டு அது பிரயோஜனம் இல்லாமல் பல்வேறு சட்ட சிக்கல்களுக்கும் நிலம் மோதல்களுக்கும் உடந்தையாக இருப்பதற்கு நிலை ஏற்பட்டு மாவட்ட வருவாய் அலுவலகமே உடந்தையாக இருந்து வருகிறது இந்த சூழ்நிலையில் திருப்பதியில் இருந்து திருநின்றவூர் வரை நிலம் எடுக்கப்பட்ட பகுதிகளில் மாவட்ட வருவாய் அதிகாரி முறையாக ஆய்வு செய்து தங்கள் தங்களிடம் உள்ள ஒரு சர்வேத்துறை அதிகாரிகளைக் கொண்டு நிலத்தை அளந்து தங்கள் வருவாய் கணக்குகளில் கொண்டு செல்லாமல் இருப்பதால் அந்த நிலங்கள் மீண்டும் ரிஜிஸ்டர் அலுவலகத்தில் மீண்டும் மறு பதிவு செய்வதற்கும் இசியில் வருவதற்கும் மாவட்ட வருவாய் துறையே காரணமாக இருந்து வருகிறது (205)தேசிய நெடுஞ்சாலைக்காக கோடிக்கணக்கில் விவசாயிகளுக்கு பணம் வழங்கியும் அந்தத் திட்டத்தை முழுமையாக நிறைவேற்றாததால் இன்று வரை நிலம் விவசாயிகள் பிடியில் இருப்பதால் பல்வேறு ஆக்கிரமிப்புகள் நில மோதல்கள் மோசடிகள் போலி ஆவணங்கள் போலி பத்திர பதிவேடுகள் உருவாவதற்கு மாவட்ட நிர்வாகமும் மாவட்ட வருவாய் அலுவலர் நிலம் எடுப்பு இரண்டு துறைகளுமே இதுக்கு காரணமாக இருந்து வருவதால் பல்வேறு சிக்கல்கள் உருவாவதற்கு இவர்களுமே காரணமாக இருந்து வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில் தற்போது தேசிய நெடுஞ்சாலையை( 205 )கிராம வருவாய் கணக்குகளிலும் சர்வே கணக்குகளிலும் அரசு கணக்குகளில் வரவேற்க வேண்டிய நிலங்கள் அனைத்தும் பணம் வழங்கியும் இன்றுவரை அவர்களின் பெயரிலேயே இருப்பதால் இந்த நிலம் பல்வேறு சிக்கல்கள் உருவாவதற்கும் ஆக்கிரமிப்பு உருவாவதற்கும் தேசிய நெடுஞ்சாலையும் வருவாய் துறையும் மாவட்ட நிலை எடுப்பு துறையும் காரணமாக இருந்து வருகின்றனர் .
இந்த தீர்வு இதற்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் தேசிய நெடுஞ்சாலை அதிகாரிகள் மாவட்ட வருவாய் நில எடுப்பதிகாரிகள் தாசில்தார்கள் வைத்து கூட்டம் கூட்டி கூட்டம் நடத்தி வாரம்தோறும் கூட்டம் நடத்தி வருகின்றார் எவ்வித முன்னேற்ற முன்னேற்பாடும் இருந்ததாக இல்லை கடந்த மூன்று வருடங்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக இருந்தாலும் ஆல் பி ஜான் வர்கீஸ் விவசாயிகளுக்கு எதிராக செயல்படுவதே தனது குறிக்கோளாக கொண்டு அவர்கள் இழப்பீடு கூறுவதற்கும் அவர்கள் நியாமான கோரிக்கைகளுக்கும் எதிராகவே செயல்பட்டு வருவது மாவட்ட விவசாயிகள் மத்தியில் கடும் கொந்தளிப்பும் அதிர்ஷ்டம் ஏற்படுத்தி உள்ளது நில எடுப்பதற்காக தங்களுக்கு வாழ்வாதாரங்கள் உரிமை பிரச்சினைகளுக்காகவும் மாவட்ட ஆட்சியரிடம் பல்வேறுமுறை அணுகிய போதும் அவர்களுக்கு எதிரான தீர்ப்புகளும் எதிரான ஆணைகளும் பிறப்பித்து நீதிமன்றத்தில் அலைக்கழித்து செல்கின்ற வகையிலே செயல்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட விவசாயிகள் அதிருப்தி அடைந்து வருகின்றனர் .
இந்த சூழ்நிலையில் கோடிக்கணக்கில் பணம் கொடுத்தும் தேசிய நெடுஞ்சாலைக்கு இருபுறமும் நிலம் எடுத்தும் அந்த நிலத்தை வருவாய் கணக்குகளில் சேர்த்தும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருவதற்கும் நடவடிக்கை எடுப்பாரா இல்லையேல் மீண்டும் ஆக்கிரமிப்பு இவரே வழிவகை காண்பாரா என்பது மாவட்ட நிர்வாகத்துக்கும் மாவட்ட வருவாய் துறைக்கும் சர்வே துறைக்கும் வெளிச்சம்.