தென்னிந்திய சினிமாவின் முக்கிய இயக்குனர்களின் ஒருவர் ராஜமவுலி  இவர் இயக்கிய முதல் படம் ஸ்டூடண்ட் நம்பர் ஒன் தெலுங்கில், அதனைத் தொடர்ந்து தெலுங்கில் பல்வேறு  சூப்பர் ஹிட் படங்களை இயக்கி வெற்றி கண்டார், தமிழ் சினிமாவில் இவர் இயக்கிய நான் ஈ, மாவீரன், பாகுபலி, 'RRR' உள்ளிட்ட படங்கள இயக்கி  மாபெரும் வெற்றி பெற்றது,  கடைசியாக RRR படத்தின் ஓய்விற்குப் பிறகு இயக்குனர் ராஜமவுலி  பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா சென்று வருகிறார்.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள முக்கிய சுற்றுலா பகுதிகளுக்கு  சுற்றுலா வந்த இயக்குனர் ராஜமவுலி ராமேஸ்வரத்தில் இருந்து  திருச்செந்தூர் செல்லும் வழியில் தூத்துக்குடி மாவட்டம்  விளாத்திகுளம் அருகே கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் உள்ள  தனியார் ரிசாட்டில் பாகுபலி பட இயக்குனர் ராஜமௌலி குடும்பத்தினருடன் தங்கி மகிழ்ந்துள்ளார். RRR திரைப்படம் மள்றும் ஆஸ்கார் விருது பெறும் நிகழ்ச்சிகள் முடிவடைந்த நிலையில் குடும்பத்தினருடன் நேரம் செலவிட இங்கு வந்ததாக தெரிகிறது.அதன் நினைவாக அங்கு மரக்கன்றை இயக்குநர் ராஜமௌலி நட்டதாகவும் ரிசார்டில் இருந்தவர் சமூக வலைதளத்தில் படங்களை பகரிந்துள்ளார்.