தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூர்-சுப்பிரமணியபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளங்காமணி என்பவரின் மகன் மாரியப்பன் (28) கோயம்புத்தூரில் பெயிண்டராக வேலை செய்து வந்துள்ளார். இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்களின் காதல் விவகாரம் தெரிந்த பெண் வீட்டார் அப்பெண்ணிற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த (---------) என்பவருடன் திருமணம் செய்ய ஏற்பாடு செய்து (21.08.2023) திருமணம் நடைபெற உள்ள நிலையில், கடந்த (18.08.2023) மாரியப்பன் கோயம்புத்தூரில் இருந்து கிராமத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில், கடந்த (18.08.2023) காலை மாரியப்பன் அக்கிராமத்தில் உள்ள பனங்காட்டுப் பகுதியில் கழுத்து மற்றும் மார்பு பகுதியில் காயங்களுடன் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்துள்ளார். இதனைக் கண்ட அக்கிராமத்தினர் குளத்தூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து உடனடியாக அங்கு சென்ற போலீசார் இளைஞர் மாரியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை நடந்த இடத்தில் தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, மாரியப்பனின் கொலைக்கு காதல் விவகாரம்தான் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில், குளத்தூர் காவல் நிலைய போலீசார் மாரியப்பன் காதலித்து வந்த பெண்ணின் தந்தை, திருமணம் செய்யவிருக்கு மணமகன் உட்பட மாரியப்பனின் நண்பர்கள் என சிலரை காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வந்தததில் மாரியப்பனின் வீட்டின் அருகே உள்ள வேலாயுதத்தின் மகன்களான முனியசாமி(35) மற்றும் மாடசாமி (28) ஆகிய இருவரும் சேர்ந்து மாரியப்பனை காட்டுப்பகுதிக்கு மது அருந்து அழைத்துள்ளனர், மூன்று பேரும் ஒன்றாக மது அருந்தி கொண்டிருந்தபோது மது போதையில் வாக்குவாதம் ஏற்பட்டதில் மாரியப்பனை முனியசாமி மற்றும் மாடசாமி ஆகிய இருவரும் அடித்துக் கொன்று விட்டு ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியில் பதுங்கி இருந்ததை போலீசார் கண்டுபிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர். மாரியப்பன் கொலை மது போதையில் நடந்ததா அல்லது வேறேனும் காரணமா என நீதிமன்ற காவல் விசாரணைக்கு பின் முழுமையாக தெரியவரும் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
Vilathikulam
இளைஞர் கொலை வழக்கில்:இரண்டு இளைஞர்கள் கைது?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விளாத்திகுளத்தில் இளைஞர் சாலை விபத்தில் பலி.
அடுத்த
ஸ்ரீ வள்ளி தேவசேன சமேத கல்யாண சுப்பிரமணியர் மஹா கும்பாபிஷேக பெருவிழா !
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026