தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ஜமீன் செங்கல்படை கிராமத்தை சேர்ந்தவர் சக்கையா என்பவரது மகன் சத்தியமூர்த்தி (23) சத்தியமூர்த்தி பெயிண்டராக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் வேலையை முடித்துவிட்டு ஜமீன் செங்கல் படை கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தார்.அப்போது விளாத்திகுளம் அருகே உள்ள வேலிடுபட்டி கிராமத்தை சேர்ந்த சைவத்துறை என்பவரின் மகன் விக்னேஷ் கார்த்திக் (23) என்பவர் லோடு வேனில் குளத்தூரில் இருந்து விளாத்திகுளம் வந்து கொண்டிருந்தார்.அய்யனார்புரம் கிராமம் அருகே வந்து கொண்டிருந்தபோது விக்னேஷ் கார்த்திக் ஓட்டி வந்த லோடு வேணும், சத்தியமூர்த்தி ஓட்டி வந்த இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் சத்தியமூர்த்தி படுகாயம் அடைந்தார். இதனை அடுத்து அக்கம் பக்கத்தினர் 108 வாகனத்தில் சத்தியமூர்த்தியை விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அனுமதித்தனர், அங்கு பரிசோதனை செய்த மருத்துவர் சத்தியமூர்த்தி ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்த விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார், சத்தியமூர்த்தியின் உடலை கைப்பற்றி பிரேத ஆய்வுக்கு அனுப்பி வைத்து.இந்த விபத்து குறித்து விளாத்திகுளம் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Vilathikulam
வாகன விபத்தில் இளைஞர் பலி.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"MLA" வை காணவில்லை! என விவசாயிகள் குற்றச்சாட்டு...!
அடுத்த
சுத்தமும் இல்லை... சுகாதாரமும் இல்லை : கமலாபுரம் ஊராட்சிக்கு கால்வாயே கிடையாதா? : ஊழல் தலைவரின் பதவி பறிக்கப்படுமா...?
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026