தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலுகாவில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் விளாத்திகுளம், வேம்பார்,வைப்பார், குளத்தூர், கோவில் குமரெட்டையாபுரம் உள்ளிட்ட 187  திருக்கோவிலுக்கு சொந்தமான சுமார் 2143 ஏக்கர் நிலங்கள் உள்ளன, இந்த திருகோவிலுக்கு சொந்தமான நிலங்களை அளவீடு செய்ய தூத்துக்குடி மண்டல இணை ஆணையர் மற்றும் உதவி ஆணையர் உத்தரவின்பெயரில், தனி வட்டாட்சியர் நம்பிரயார், விளாத்திகுளம் சரக ஆய்வாளர் முருகன், நில அளவையர்கள் வினோத் குமார் அஜித்குமார் மற்றும் திருக்கோவில் பணியாளர்கள் அடங்கிய குழுவினர், விளாத்திகுளம், துலுக்கன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் ரேவார் கருவி மூலம் கடந்த 3 நாட்களாக அளவீடு செய்து வருகின்றனர். இதுவரை சுமார் 1200 ஏக்கர் நிலங்கள் அளவீடு செய்துநிலங்களில் எல்லை கற்கள் நடுவதற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து நிலம் அளவிடும் பணி நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.