விளாத்திகுளம் அருகே சாலை விபத்தில் கிராம நிர்வாகஅலுவலர் பரிதாபமாக உயிரிழப்பு.



விருதுநகர் மாவட்டம் பந்தல்குடி- செட்டிகுளம் கிராமத்தை சேர்ந்த  இசக்கிமுத்து என்போரின் மகன்  கருப்பசாமி(45) என்பவர், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள சங்கரலிங்கபுரம் கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணி செய்து வந்தார், இந்நிலையில் இன்று மாலை பணியை முடித்துவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் தனது சொந்த ஊரான பந்தல்குடிக்கு சென்று கொண்டிருந்தபோது, விளாத்திகுளம் அருகே உள்ள மணியக்காரன்பட்டியில் இருந்து ராம்கோ சிமெண்ட் ஆலை செல்லும் சாலை அருகே எதிர்பாராத விதமாக கருப்பசாமி ஒட்டி வந்த இருசக்கர வாகனம் மீது சிவலார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் ஸ்ரீகாந்த் (22) ஓட்டி வந்த  இருசக்கர வாகன மோதி விபத்துக்குள்ளானது, இதனை அடுத்து அவ்வழியாக சென்றவர்கள் கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமியை சிகிச்சைக்காக வாகனத்தில் அழைத்துச்சென்றபோது,செல்லும் வழியிலேயே கிராம நிர்வாக அலுவலர் கருப்பசாமி பரிதாபமாக உயிரிழந்தார்.


இதனை அடுத்து தகவல் அறிந்த புதூர் காவல் நிலைய போலீசார் கருப்பசாமியின் உடலை விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு  உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்து இந்த விபத்து குறித்து புதூர் காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.