தீபாவளியை முன்னிட்டு மாற்றுத்திறனாளி பள்ளி மாணவ,மாணவிகளுக்கு சீருடை மற்றும் புத்தகங்கள் வழங்கிய விளாத்திகுளம் எம்.எல்.ஏ!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள கீழவிளாத்திகுளம் கிராமத்தில் இயங்கி வரும் அக்லூட் சிறப்பு பள்ளியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ -  மாணவிகளுக்கு தீபாவளியை முன்னிட்டு புத்தாடை,பட்டாசு,இனிப்பினை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் வழங்கி வாழ்த்தினார்.



நிகழ்வில் பள்ளி நிறுவனர் தானேஷ் கனகராஜ் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு,விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து,விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன்,விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல்,புதூர் மத்திய ஒன்றிய செயலாளர் ராதாகிருஷ்ணன் விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி உள்ளிட்ட ஆசிரிய-ஆசிரியைகள்,மாணவ - மாணவிகள் கலந்து கொண்டனர்.


அகவன் மீடியா சார்பாக அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்...