விவசாய மக்களின் கோரிக்கை அடிப்படையில் தான் விவசாய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது:விவசாயிகள், மக்களை சென்றடையும் வகையில் வேளாண் பட்ஜெட் வந்துள்ளது! 


இது மக்கள் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்குரிய விஷயமாக இருக்கும் - விளாத்திகுளத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா பேட்டி!


தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் உள்ள பாரதியார் திருவுருவசிலைக்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா மாலை அணிவித்தார். தொடர்ந்து விளாத்திகுளம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் விளாத்திகுளத்தில் இருந்து நாகலாபுரம் அரசு கல்லூரி வழியாக கந்தசாமிபுரம் வரை செல்லும் அரசு பேருந்து சேiயை அமைச்சர் மதன்ராஜா தொடங்கி வைத்தார்.


இதன் பின்னர் அமைச்சர் மதன்ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்,

தொழில் துறையில் 2036-ல் 1.5 ட்ரில்லியன் தான் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் இலக்கு, அதற்கு சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை பக்கபலமாக இருக்கும், தொழில் துறையில் 30 சதவீத வருமானம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் மூலமாக வருகிறது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அதிகாரிகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்துவது மட்டுமின்றி, மாவட்டம்தோறும் ஆய்வு செய்து வருகிறேன். மாவட்ட தொழில் மையங்களில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு என்ன திட்டங்கள் உள்ளது. மத்திய, மாநில அரசுகளில் திட்டங்கள், மானியம், வேலைவாய்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்,.மாவட்ட தொழில் மையம் மூலமாக மாதம் தோறும் முகாம் நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் கடந்த 3 மாதங்களாக நல்ல முன்னேற்றம் தெரிகிறது. மேலும் மக்களை சென்று எளிதில் அடையும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.


வேளாண் பட்ஜெட்டிற்கு முன்பாக துறைரீதியாக ஒவ்வொரு மண்டலத்திலும் அந்த துறை அமைச்சர் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி விவசாய மக்களின் கோரிக்கைகளையும் வாங்கினார்.அதன் அடிப்படையில் தான் வேளாண்பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு, விவசாயிகள், மக்களை சென்றடையும் வகையில் வேளாண் பட்ஜெட் வந்துள்ளது. இது மக்கள் மற்றும் விவசாயிகளின் வளர்ச்சிக்குரிய விஷயமாக இருக்கும் என்றார். தொடர்ந்து பேசிய அமைச்சர் வேளாண்மை குறிய விஷயத்தை அந்த துறை அமைச்சரிடம் தான் கேட்க முடியும். ஆவர் தான் அதற்குரிய விளக்கத்தினை கொடுப்பார். என்னுடைய துறைக்கான கேள்விகளை என்னிடம் கேளுங்கள் என்றார்.


இந்தநிகழ்வில்  மாவட்ட செயலாளர் மகேஸ்வரன்,மாவட்ட இணைச்செயலாளர் காசிராம், மாவட்ட துணைசெயலாளர் எபினேசர், முருகேஸ்வரி, நகரசெயலாளர் முத்துராமலிங்கசேதுபதி, மாவட்ட தொண்டர் அணி ரெகுராமபுரம் கண்ணன்,  ஒன்றிய செயலாளர்கள் செண்பககனி, விஜயகுமார் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, மற்றும் துணை செயலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.