ஆடுகள் வரத்தும் இல்லை - வியாபாரிகளும் வரவில்லை - களையிழந்து காணப்பட்ட புகழ்பெற்ற எட்டையாபுரம் ஆட்டுச்சந்தை!
பல கோடி ரூபாய்க்கு விற்பனை நடந்த ஆட்டுச் சந்தை சில லட்சங்களை கூட தாண்ட முடியாத நிலை - நாளை மாற்றி வைத்ததாலும், மழையின் காரணமாகவும் களையிழந்ததாக தகவல்!
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள புகழ்பெற்ற ஆட்டுச்சந்தை வாரந்தோறும் சனிக்கிழமைகளில் கூடும்.கிராமப்புறங்களில் வளரும் ஆடுகள் இந்த சந்தைக்கு கொண்டு வரப்படுவதால், திருநெல்வேலி, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆடுகள் வாங்க வியாபாரிகள் வருவார்கள். வாரந்தோறும் இங்கு சுமார் ரூ.2 கோடி வரை விற்பனை நடைபெறும்.ரம்ஜான், தீபாவளி, பொங்கல்மற்றும் திருமண முகூர்த்த காலங்களில் ஆடுகள் விற்பனை அதிகமாக நடக்கும்.
இன்னும் தீபாவளிக்கு இரண்டு நாட்கள் உள்ள நிலையில் சனிக்கிழமைக்கு பதிலாக, வெள்ளிக்கிழமை நடைபெறும் என்றும், இரவு வரை விற்பனை உண்டு என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வந்தவர்களும் சரி, வாங்க வந்தவர்களும் என சொற்ப அளவிலிருந்ததால் ஆட்டுச் சந்தை வெறிச்சோடி காணப்படுகிறது. இரவு வரை சந்தை என்பதால் மதியத்திற்கு மேல் வியாபாரிகள் மற்றும் ஆடு வளர்ப்போர் வருவார்கள் என்று எதிர்பார்த்தனர். ஆனால் யாரும் வரவில்லை. வழக்கமாக பண்டிகை காலங்களில் ஐந்து கோடி ரூபாய் முதல் 10 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெற்று வந்த எட்டயபுரம் ஆட்டுச் சந்தையில் இந்த ஆண்டு சில லட்சங்களுக்கு கூட ஆடுகள் விற்பனை நடைபெறவில்லை தடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எட்டயபுரம் மற்றும் சுற்று வட்டார பகுதியில் பரவலாக மழை பெய்து வருவது மட்டுமின்றி, விவசாய பணிகள் நடைபெற்று வருவதால் ஆட்டுச் சந்தை என்பது களையிழந்து காணப்பட்டதாக வியாபாரிகளும், ஆடு வளர்ப்போரும் தெரிவித்துள்ளனர்.