கிராமசபை கூட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக போடப்பட்ட தீர்மானம் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தாண்டி செல்லாததால் “வாயில் கருப்பு துணியை கட்டி” கிராம சபைக்கூட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்கள்!
தீர்மான பதிவேட்டில் எழுதாமலே பொதுமக்களிடம் "கைநாட்டு" மற்றும் கையெழுத்து வாங்கிய ஊராட்சி மற்றும் கிராம நிர்வாகம்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குருவார்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது, இந்தக் கூட்டத்திற்கு அதே ஊராட்சிக்கு உட்பட்ட A. குமராபுரம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் “வாயில் கருப்புத்துணியை கட்டியவாறு” கலந்து கொண்டு கிராமசபை கூட்டத்திற்கு தங்களது கண்டனத்தை தெரிவித்தனர்.
அப்போது அக்கிரம மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பாக வந்திருந்த அதிகாரியிடம், கடந்த 10 ஆண்டுகளாக போடப்பட்ட தீர்மானம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை தாண்டுவதே இல்லை, ஒரு கிராமசபை கூட்டம் என்பது பாராளுமன்றத்திற்கு சமமானது என்று கூறப்படுகிறது, ஆனால் வருடத்திற்கு 5 முறை கிராமசபை கூட்டம் நடைபெற்று கடந்த 10 ஆண்டுகளாக சுமார் 50 கிராம சபை கூட்டங்களில் இக்கிரமங்களுக்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானம் கிராம பஞ்சாயத்து அதைத் தாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அதைத் தாண்டி மாவட்ட ஆட்சியருக்கோ தமிழக அரசின் கவனத்திற்கு செல்வதே இல்லை.
ஒரு கிராம பஞ்சாயத்து நிர்வாகத்தில் பட்டியல் இன மக்களுக்கு 30 சதவீதம் பஞ்சாயத்து நிதியிலிருந்து செலவு செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ள நிலையில், அந்தப் பணத்தை பட்டியலின மக்களுக்கு செலவு செய்வதே இல்லை, அந்தப் பணத்தை பஞ்சாயத்து நிர்வாகம் யாருக்கு செலவு செய்தது?.
கிராமத்தில் உள்ள கிணற்றை தூர் வாருவதற்கு கிராம மக்கள் ரூபாய் 15,000 பணம் வசூல் செய்து தூர்வாரும் நிலை உள்ளது, கிராமப்புற பஞ்சாயத்து நிர்வாகத்திலும் ஊதிய பணம் இல்லை என்று கூறப்படுகிறது.
இந்த நாட்டில் சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகி உள்ளது, ஆனால் எங்கள் கிராமத்தில் தற்போது வரை சுடுகாடு இல்லாமல் பிணங்களை சாலையிலும் நீர் வளர்த்து ஓடைகளிலும் புதைத்து வருகிறோம், சுடுகாடும் சுடுகாட்டுக்கான மேற்குரையும் கேட்டு பல ஆண்டுகள் ஆன நிலையில், பல ஆண்டுகளாக எங்கள் கிராம மக்கள் போராடி வருகின்றனர்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தண்ணீர் நீர்த்தேக்க தொட்டியில் 1 லிட்டர் தண்ணீர் கூட பிடித்தது கிடையாது, ஆனால் அதற்கான பராமரிப்பு செலவு தொகை மட்டும் ஆண்டுக்காண்டு பஞ்சாயத்து நிர்வாகத்தில் இருந்து எடுக்கப்படுகிறது.
ஜல்ஜீவன் திட்டம் மூலமாக ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் பைப் நல்லி இணைக்கப்பட்டுள்ளது, ஆனால் தற்போது வரை குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை, அதேபோல் அதே கிராமத்தில் ஒரு பகுதியில் மட்டும் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்படுகிறது, எங்கள் பகுதியில் எந்த திட்டமும் செயல்படுத்தவில்லை என அதிகாரிகளிடம் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்தனர், அதனைத்தொடர்ந்து எங்கள் கிராமத்திற்கு அனுப்பி திட்டங்களையும் முறையாக செயல்படுத்த வேண்டும் இல்லை எனில் வருகின்ற உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிப்போம் என்று அவர்கள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்தனர்.
அதேபோல் கிராமசபைக் கூட்டத்திற்கு ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலர் மற்றும் பஞ்சாயத்து செயலாளர் மட்டுமே வந்திருந்ததாகவும், மற்ற எந்தத்துறை சார்ந்த அதிகாரிகளும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை என்றும் அக்கிரமம் மக்கள் குற்றம் சாட்டினர்.
மேலும் கிராமசபை கூட்டம் முடிந்த பின்பு இறுதியாக கிராம நிர்வாக அலுவலர் கூட்டத்தில் கலந்து கொண்டார், கூட்டம் முடிந்த பின்பு பொதுமக்களிடம் தீர்மானம் ஏதும் எழுதாமலே ஏற்கனவே ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து பிரிண்ட் ( PRINT) செய்யப்பட்ட பக்கத்திலிருந்து சுமார் நான்கு பக்கத்திற்கு மேல் இடைவெளி விட்டு, பொதுமக்களிடம் இதில் என்ன தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை கூறாமலே பொதுமக்களிடம் “கைநாட்டு” மற்றும் கையெழுத்துகளை தீர்மான பதிவேட்டில் ஊராட்சி ஒன்றிய அலுவலகப்பணியாளர்கள் வாங்கியது குறிப்பிடத்தக்கதாகும்.