தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர் பேரூராட்சியில் சுமார் 79 நபர்களுக்கு கடந்த 2000-ம் ஆண்டில் ஆதிதிராவிட நலத்துறையின் மூலம் சர்வே எண்: 228/2A ல் பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதில் சம்பந்தப்பட்ட பயனாளிகளுக்கு அளவீடு செய்து முறையான பட்டா வழங்காததால் வீடு கட்ட முடியாத நிலை இருந்து வருகிறது. எனவே முறையாக அளவீடு செய்து தர கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புதூர் நகர செயலாளர் செந்தில்வேல் தலைமை தாங்கினார். அய்யனார் முன்னிலை வகித்தார். போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.புவிராஜ், தாலுகா செயலாளர் கா.ஜோதி, தாலுகா குழு உறுப்பினர்கள் பி ஆண்டி, மலைக்கனி, விவசாயிகள் சங்க தாலுகா தலைவர் ஆர். ராமலிங்கம் மற்றும் சின்னவநாயக்கன்பட்டி கிளைச் செயலாளர் சுபாபுராஜ், வாலிபர் சங்கம் கனகராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட பயனாளிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் !
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
காயல்பட்டினம் பகுதியில் வீடு புகுந்து நகை திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது.
அடுத்த
சாலைப் பணிகள் முடிந்து 10 நாட்கள் கூட ஆகல... படுமோசமான நிலையில் காணப்படும் சாலைகள் : விபத்து ஏற்படும் அபாயத்தில் பயணிக்கும் மக்கள் : அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர் மீது மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026