எட்டையாபுரத்தில் பள்ளியில் நலத்திட்ட உதவிகளை வழங்கியதை ரீல்ஸ் வீடியோ பதிவிட்ட தவெக நிர்வாகிகள்!
பள்ளி கல்வித்துறை அமைச்சரின் எச்சரிக்கையையும் மீறி நடந்து கொள்ளும் தவெக நிர்வாகிகள்!
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரத்தில் தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு,தமிழ் பாப்திஸ்து எனும் அரசு உதவி பெறும் துவக்கப்பள்ளியில் விளாத்திகுளம் பகுதியை சேர்ந்த தமிழக வெற்றி கழக நிர்வாகிகள், வாகனத்தில் இருந்து இறங்கி பள்ளிக்குள் சென்று பள்ளி மாணவ,மாணவிகளுக்கு நோட்புக் வழங்கி சிறப்புரையாற்றும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோவாக பதிவிட்டுள்ளனர்.
ஏற்கனவே தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், தமிழக வெற்றிக்கழக கட்சியை சேர்ந்த எந்த நிர்வாகிகளும், நலத்திட்ட உதவிகள் வழங்குகிறேன் என்ற பெயரில் பள்ளிக்குள் சென்று மாணவர்களுக்கு இடையூறு செய்யக்கூடாது, நலத்திட்ட உதவிகளை அந்தப்பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் கொடுத்தால் போதும், நலத்திட்ட உதவிகளை வழங்கும் வீடியோவை ரிலீஸ் ஆக வெளியிட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த நான் 4 மாதங்களுக்கு முன்பாகவே எச்சரித்திருந்த நிலையில், அமைச்சரின் எச்சரிக்கையை மீறி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் செயல்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.