சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு4 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த ரூ.1,500 கோடி மானிய தொகையை வழங்க முதல்வர் ஒப்புதல் – இந்த ஆண்டு ரூ.600 கோடி வழங்கத் திட்டம்!



மின்கட்டணப் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை - சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா பேட்டி! 




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தில் 35 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, புதூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 74.22 லட்சம் மதிப்பீட்டில் புதிய 3 வகுப்பறை கட்டிடங்கள்,வெம்பூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் 49 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட பள்ளி வகுப்பறைகள் திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன்ராஜா கலந்துகொண்டு கட்டிடங்களை திறந்து வைத்தார்.



இநனைதொடர்ந்து அமைச்சர் மதன்ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் திறக்கப்படாமல் உள்ள அரசு கட்டிடங்களைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்தம் 13 அரசு கட்டிடங்கள் திறக்கப்பட உள்ளன. மழைக்காலத்தைக் கருத்தில் கொண்டு, குறிப்பாக பள்ளிக் கல்வித்துறைக்குப் பயன்படும் கட்டிடங்களை உடனடியாகத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.



சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் உச்சநேர மின்கட்டணம் மற்றும் மின்சாரப் பயன்பாட்டுக் கட்டணம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து, மின்சாரத் துறையிடம் விளக்கம் கோரப்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக மின்சாரத் துறை அமைச்சர் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும், அவர்களிடமிருந்து ஒரு நல்ல பதில் வந்ததும் மின்கட்டணப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டு, தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்,


கடந்த நான்கு ஆண்டுகளாக நிலுவையில் இருந்த சுமார் ரூ.1,500 கோடி மானியத தொகை  வழங்கப்படமால் இருந்தது.த. வெ. க. ஆட்சிக்கு வந்ததும் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாகவும், நடப்பு நிதியாண்டில் மட்டும் ரூ.600 கோடி மானியம் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும், இதில், இதுவரை ரூ.120 கோடி தமிழகம் முழுவதும் தொழில் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள தொகை அடுத்தடுத்த காலாண்டுகளில் வழங்கப்படும் என்றும் கூறினார்.


தென் மாவட்டங்களில் படித்த இளைஞர்கள் புதிய தொழில்களைத் தொடங்குவதற்கு வங்கிக் கடன் மற்றும் அரசு உதவிகள் கிடைப்பதில் உள்ள சிரமங்கள் குறித்த கேள்விக்குப் பதிலளித்த அவர், தமிழகத்தின் 38 மாவட்டங்களிலும் மாவட்டத் தொழில் மையங்கள் வாயிலாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.


இதன் மூலம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியங்கள், சலுகைகள் மற்றும் அவற்றைப் பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து தொழில் முனைவோருக்கு விளக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். குறிப்பாக, பின்தங்கிய மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்க முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளதாகவும், ஏற்கெனவே தொழில் நடத்தி வருபவர்களுக்கும் புதிதாகத் தொழில் தொடங்குபவர்களுக்கும் தேவையான உதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.


சிறு, குறு தொழில் நிறுவனங்களை நடத்துவோர் அரசு அலுவலகங்களில் அலைக்கழிக்கப்படுவதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர்,முந்தைய ஆட்சிக் காலத்தில் நிலுவையில் இருந்த மானியத் தொகைக்கு தற்போதைய அரசு ஒப்புதல் பெற்று வழங்கி வருவதாகக் கூறினார். நடப்பு நிதியாண்டில் மீதமுள்ள மானியத் தொகையும் உரிய தொழில் முனைவோருக்குக் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

 இந்நிகழ்வில் 

 துணைப் பொதுச் செயலாளர் எபனேசர் , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அரசு துறை சார்ந்த   அதிகாரிகள், வெம்பூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி, ஆசிரியப் பெருமக்கள், தமிழக வெற்றி கழக கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.