விளாத்திகுளம் - க.சுப்பிரமணியபுரத்தில் ஸ்ரீ செல்லியம்மன் கோவில் ஆடி கொடை விழா : ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட முளைப்பாரி வழிபாடு!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் - க. சுப்பிரமணியபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மகாசக்தி, ஸ்ரீ செல்லியம்மன், அருள்மிகு ஸ்ரீ முனியசாமி திருக்கோவில் 18-ம் ஆண்டு ஆடி கொடை விழாவை முன்னிட்டு, பக்தர்களின் அக்னிசட்டி தீர்த்த குடம் மற்றும் பால்குடம் எடுத்து ஊர் விளையாடுதல் நிகழ்ச்சி,அதனைத் தொடர்ந்து கிடா வெட்டி பொங்கல் வைத்து தங்களின் நேர்த்திக் கடன்களை செலுத்தினர்.


ஆடி மாத கொடை விழாவில் இறுதி நிகழ்ச்சியான இன்று கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த முளைப்பாரிகளை சுற்றி பெண்கள்  கும்மியடித்து வழிபாடு நடத்திய பின்,ஆண்கள் மற்றும் பெண்கள் என ஏராளமான பக்தர்கள் பலவகையான முளைப்பாரிகளை ஆட்டம் பாட்டத்துடன் ஊர்வலமாக எட்டையாபுரம் சாலையிலிருந்து பைப்பாற்றுக்கு எடுத்துச்சென்று தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தினர்.