கடும் வெயிலில்  மாட்டு வண்டி போட்டியை தொடங்கி மாடுகளை துன்புறுத்தியதாக புகார்...



விழா கமிட்டியினர் மற்றும் வர்ணனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை...



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் காலம் காலமாக மாட்டுவண்டி பந்தயம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்,கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிகாலை 6:00 மணிக்கு தொடங்கப்பட்டு 9:00 மணிக்குள் போட்டிகள் முடிவடையும், இதனால் மாடுகள் வெயிலின் தாக்கத்திலிருந்து துன்புறுத்தப்படாமல் இருந்து வந்தது.ஆனால் தற்போது விளாத்திகுளம் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 6:00 மணிக்கு மாட்டுவண்டி பந்தயத்தை தொடங்குவதற்கு பதிலாக, போட்டியை தொடங்கி வைக்க வரும் முக்கிய பிரமுகர்களுக்காக 7:00 மணி முதல்  8:00 மணி வரை போட்டியை தொடங்கத் தாமதப்படுத்தி, மாடுகளை கடும் வெயிலில் அடித்து துன்புறுத்தி  காலை 11 மணி வரை போட்டி நடைபெற்று வருகிறது.


குறிப்பாக மாட்டு வண்டி பந்தயத்தை நடத்துவதற்கு விலங்குகள் நல வாரியம், சுகாதாரத்துறை,நெடுஞ்சாலைத்துறை வருவாய்த்துறை இடமிருந்து தடையில்லா சான்றிதழ் ஆகியவற்றை வாங்கிய பின்பு காவல்துறையினரிடம் பாதுகாப்பு அனுமதி பெற வேண்டும்.


ஆனால் விளாத்திகுளத்தில் நடைபெறும் மாட்டுவண்டி பந்தயத்திற்கு  மேலே குறிப்பிட்ட எந்த துறையிடமிருந்தும் முறையான அனுமதி பெறாமல் காவல்துறையினரிடம் மட்டும் அனுமதி பெற்று,பந்தயம் நடைபெறும் சாலை,ஏதோ விழா கமிட்டினருக்கு மட்டுமே சொந்தம் போலவும், பந்தயத்தை வர்ணிக்கும் வர்ணனையாளர்கள் மன்னர்கள் போலவும்,அந்தப்பஸ்சை நிறுத்து அந்த லாரியை நிறுத்து,அந்தப் பைக்கை நிறுத்து, அந்த வாகனத்தை நிறுத்து இந்த வாகனத்தை நிறுத்தி என போக்குவரத்திற்கு இடையூறு செய்வதை வாடிக்கையாக வைத்து வருகின்றனர்.


கிராமசாலையோ அல்லது நெடுஞ்சாலையோ மாட்டுவண்டி பந்தய விழா கமிட்டியாளர்களுக்கு மட்டும் சொந்தம் அல்ல, அது அனைத்து பொது மக்களுக்கும் சொந்தமான ஒன்று, பொதுவாக ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு ஒரு இடத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலையில் உள்ள  பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் விழா கமிட்டிக்கு ஆதரவாக காவல்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு எதிராக செயல்பட்டு வருவது விளாத்திகுளம் பகுதியில் தொடர்கதையாக உள்ளது.


இந்தநிலையில் இன்று விளாத்திகுளம் வேம்பார் சாலையில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் சுமார் 120 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு சீறிபாய்ந்தன,

காலை 6 மணிக்கு தொடங்க இருந்த பந்தயம் முக்கிய பிரமுகர்களுக்காக காலை 8 மணிக்கு தொடங்கி கடும் வெயிலில் மாடுகளை துன்புறுத்தி விழா கமிட்டியினரின் சொந்த லாபத்திற்காகவும், மாட்டு வண்டி பந்தய சங்கத்தின் சுய லாபத்திற்காகவும் காலை 11 மணியளவில் போட்டியானது  முடிவடைந்தது, அதனைத்தொடர்ந்து பரிசு வழங்கும் விழாவில் வாக்குவாதம் ஏற்பட்டு மதியம் 12 மணி வரை மாடுகளை வெயிலில் காக்க வைத்து பரிசுகளை வாங்கிச்சென்றனர்.


தமிழரின் பாரம்பரிய மாட்டுவண்டி பந்தயம் நடத்துகிறோம் என்ற பெயரில், தங்களின் சுயலாபத்திற்காக மாடுகளை கடும் வெயிலில் ஓட்டி விழா கமிட்டிக்கும், மாட்டுவண்டி பந்தய சங்கத்திற்கு  வருவாயை ஈட்டும் வகையிலும் செயல்படுபவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை எடுத்துள்ளனர்.