கடந்த டிசம்பர்
மாதம் பெய்த தொடர் கன மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள
ஆற்றங்கரை கிராமத்தில், அமைந்துள்ள
வைப்பாற்றும் தடுப்பணைப் பகுதிகள் மற்றும் கரையோர பகுதிகள் வெள்ளத்தால் அடித்துச்
செல்லப்பட்டது. இதைத்தொடர்ந்து விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மற்றும்
அதிகாரிகள் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டப்பின் மாணவர்கள் மற்றும் பொதுமக்களில்
போக்குவரத்திற்கு பெரிதும் பயன்படும் வைப்பாற்றின் கரைப்பகுதியை முதலில் சரி
செய்யாமல் தடுப்பணைப் பகுதிகளை சரி செய்ய உத்தவிட்டு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று
வருகிறது.
இதனால் இந்த வைப்பாற்றின் பாதையை பயன்படுத்தி பள்ளிக்கு சென்று வந்த
ஆற்றங்கரை கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட
பள்ளி மாணவர்கள் ஆற்றுக்கரையில் ஏறி செல்வதற்கு முடியாத சூழல் நிலவி வருவதால்,
தங்கள் கிராமத்திலிருந்து
5 கிலோமீட்டர் தூரத்தில்
பள்ளிக்கு சென்று வந்த மாணவர்கள் தற்போது 25 கிலோமீட்டர் தூரம் சுற்றி விளாத்திகுளம்
சென்று அங்கிருந்து பேரிலோவன்பட்டியில் உள்ள பள்ளிக்கு செல்லக்கூடிய
சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி, ஆற்றங்கரை கிராமத்தைச் சேர்ந்த மக்கள் மற்றும்
கர்ப்பிணி தாய்மார்கள் அவசர மருத்துவ உதவிக்கு இந்த வைப்பாற்றின் பாதையை
பயன்படுத்தியே பேரிலோவன்பட்டியில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று
வருவது வழக்கம். ஆனால் தற்போது பொதுமக்கள் சென்று வருவதற்கேற்ப கரைப்பகுதியை
செய்யாததால் கடந்த சில தினங்களாக பெரிதும் அவதிப்பட்டு வருவதாக அக்கிராம மக்கள்
தெரிவிக்கின்றனர்.
இது ஒரு புறம்
இருக்க... அங்குள்ள வைப்பாற்றின் தடுப்பணைக்கு அருகில் உள்ள பகுதிகளை சரி
செய்வதில் ஹிட்டாச்சி, ஜேசிபி
இயந்திரங்களை பயன்படுத்தி ஆற்றிலியே மணலை எடுத்து ஏராளமான டிப்பர் வாகனங்கள் மூலம்
தடுப்பணியை சரி செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஆனால் பள்ளி
மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்திற்கு அத்தியாவசியமாக விளங்கும்
ஆற்றங்கரை - சிங்கிலிபட்டி வைப்பாற்றுப் பாதையின் கரையோரத்தில் அடித்துச்
செல்லப்பட்ட கரை பகுதிகளை சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ளாமல் இருப்பது ஆற்றங்கரை
கிராம மக்களுக்கு பெரிதும் கோபத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் தடுப்பணையை சரி செய்யும்
அதிகாரிகளிடம் தங்களுக்கு பாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று பலமுறை
முறையிட்டும் சரி செய்ய நடவடிக்கை எடுத்த பாடில்லை என ஆதங்கத்துடன் கூறுகின்றனர்
கிராம மக்கள். எனவே பள்ளி மாணவர்களின் நலன் கருதி உடனடியாக ஆற்றங்கரை -
சிங்கிலிபட்டி வைப்பாற்றுப் பாதையை போர்க்கால அடிப்படையில் உடனடியாக சரி செய்து தர
வேண்டும் என்று ஆற்றங்கரை கிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பொது மக்கள்
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Vilathikulam
வைப்பாற்றின் கரையை சரி செய்யாததால் பள்ளி மாணவர்கள் சிரமம் : 25 கி.மீ தூரம் சுற்றி பள்ளிக்குச் செல்வதால், உடனடியாக சரி செய்ய கோரிக்கை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
13 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி பலி : பேரூராட்சி அதிகாரிகளின் அலட்சியம்தான் காரணம்!
அடுத்த
5200 குடும்ப அட்டைதாரர்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய கனிமொழி எம்.பி.!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026