விளாத்திகுளம் அருகே நள்ளிரவில் அரசு அதிகாரிகளின்  துணையுடன் ஆற்று மணல் கடத்தல்: மணல் மாஃபியாக்களால் நிலத்தடி நீர்மட்டம் பாதிப்பு  என பொதுமக்கள் குற்றசாட்டு!



தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாக அரசு அதிகாரிகள் மீது தமிழக வெற்றிக்கழக நிர்வாகி குற்றச்சாட்டு!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் வைப்பார் ஆற்றுப்படுகையின் அருகே சுமார் 8 ஏக்கர் பரப்பளவில்,50 அடி ஆழத்தில் தொடர்ந்து மூன்று நாட்களாக வருவாய்த்துறை மற்றும் காவல்துறை உதவியுடன் மணல் மாஃபியாக்கள் JCP மற்றும்  50-க்கும் மேற்பட்ட டிராக்டர் வாகனம் மூலமாக இரவு முழுவதும் தொடர் மணல் திருட்டு ஈடுபட்டு வருகின்றனர்.


இதுகுறித்து மணல் திருட்டு நடப்பதாக அப்பகுதி மக்கள் வருவாய்த்துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தாள்,அரசு அதிகாரிகள் புகார் கொடுத்த பொதுமக்களின் தொலைபேசி எண்ணை மணல் மாஃபியாக்களிடம் கொடுத்து மிரட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 



இதுகுறித்து தமிழக வெற்றிக்கழக நிர்வாகி எபநேசர் கூறுகையில், மேட்டுப்பட்டி கிராமம் அருகே உள்ள தனியார் வீட்டு மனை வழியாக பிரத்யோகமாக சுமார் 30 அடி அகலத்திற்கு பாதை அமைத்து, இரவு முழுவதும் சட்ட விரோதமாக அரசு அதிகாரிகளின் துணையுடன் ஆற்று மணல் அள்ளப்பட்டு வருகிறது, தற்போது வைப்பார் ஆற்றில் தண்ணீர் இல்லாமல் விளாத்திகுளம் பகுதி முழுவதும் குடிநீர் பிரச்சனை ஏற்பட்டு வரும் நிலையில், மணல் மாஃபியாக்கள் மணல் திருட்டில் ஈடுபடுவதால், நிலத்தடி நீர்மட்டம் குறைந்து அடுத்தாண்டும் குடிநீர் பிரச்சனை ஏற்படும் சூழ்நிலை ஏற்படுவதாகவும்,விளாத்திகுளம் பகுதியில் உள்ள அரசு அதிகாரிகள் தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்வதாகவும், தற்போது உள்ள அரசு அதிகாரிகள் திமுகவின் பிடியிலிருந்து செயல்பட்டு வருவதாக   தமிழக வெற்றிக்கழக நிர்வாகி எபனேசர் குற்றம் சாட்டியுள்ளார்.



எனவே சமூக விரோத செயல்பாட்டில் ஈடுபட்டு வரும் மணல் மாஃபியாக்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் துணை போகின்ற வருவாய்துறை மற்றும் காவல் துறையினர் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி எபனேசர் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.