விளாத்திகுளம் அருகே ஆபத்தான நிலையில் இருக்கும் மின்கம்பத்தால் பொதுமக்கள் அச்சம்!




தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள முத்தையாபுரம் கிழக்குத்தெருவில் ஆபத்தான நிலையில் “இப்போ விழுகுமோ பிறகு விலகுமோ” என்ற சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற கோரி அப்பகுதி மக்கள் பலமுறை புகார் அளித்தும்,மின்சாரத்துறையினர் அந்தப்புகாரினை அலட்சியத்தோடு பெரிது படுத்தாமல் பொதுமக்களின் உயிரோடு விளையாடி வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.


அதேபோல் அடிக்கடி இந்த சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தால் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்தடை ஏற்படுவதாகவும், இதனால் கைக்குழந்தைகள்,முதியவர்கள் பெரும் இன்னல்களை சந்தித்து வருகின்றனர், எனவே மின்கம்பத்தை மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கிராம மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.