தூத்துக்குடி to மதுரை தேசிய நெடுஞ்சாலையில் முறையான அறிவிப்பு பலகை மற்றும் சாலையை சீரமைக்க  பொதுமக்கள் கோரிக்கை.


புகார் கொடுத்தும் புகாரை அலட்சியப்படுத்தியதாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் மீது பொதுமக்கள் குற்றச்சாட்டு.


தூத்துக்குடி to மதுரை நெடுஞ்சாலை  தூத்துக்குடி மாவட்டம் வெம்பூர்,மேலக்கரந்தை,தாப்பாத்தி,எட்டையாபுரம்,கீழஈரால்,சோழபுரம்,எப்போதுவென்றான்,குறுக்குசாலை உள்ளிட்ட பகுதிகளில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று  சுற்றுவட்டார பகுதிகளில் கோரிக்கையின் அடிப்படையில் தற்போது மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.



அவ்வாறு மேம்பாலம் கட்டும் பணிக்காக சாலையின் இருபுறமும் சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது,அவ்வாறு சர்வீஸ் சாலை அமைக்கப்பட்டுள்ளது என்பதற்கு எந்த ஒரு அறிவிப்பும் இல்லாததால், தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகத்தில் வரும் கனராக வாகனங்கள் மற்றும் சிறிய வாகனங்கள், சர்வீஸ் சாலையை கவனிக்காமல் மேம்பால கட்டுமான பணி பகுதிக்குள் சென்று விபத்து ஏற்படுகிறது, அதே போல் அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் சாலை குண்டும் குழியுமாக   இருப்பதால், இருசக்கர வாகன ஓட்டி முதல் கனரா வாகன ஓட்டிகள் வரை அனைவரும் பெரிய பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இரவு நேரங்களில் சர்வீஸ் சாலையின் இருபுறமும் மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என்று  வெம்பூர், மேலக்கரந்தை, தாப்பாத்தி உள்ளிட்ட கிராம மக்கள் நெடுஞ்சாலை துறையினருக்கு பலமுறை புகார் அளித்தும்,இதுவரை நெடுஞ்சாலைத்துறையிடம் பொதுமக்கள் கொடுத்த புகாரை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் அலட்சியப்படுத்தியதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.



இந்நிலையில்  மேலே குறிப்பிட்டுள்ள நெடுஞ்சாலையில் உள்ள பிரச்சனைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று வெம்பூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் திருப்பதி ஏற்பாட்டில்  வெம்பூர் கிராம மக்கள் எட்டையாபுரம் வட்டாட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.