இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, தமிழகம் முழுவதும் மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடு குறித்து பேருந்து பொதுமக்கள் அதிகமாக கூடும் பல இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டு அதன் செயல்முறை விளக்கங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள பனையூர் கிராமத்திலுள்ள பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கு வைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குப்பதிவு இயந்திரத்தில் தங்களது வாக்கினை செலுத்தி "விவிபேட்" இயந்திரத்தின் செயல்பாடு குறித்து நன்கு தெரிந்து கொண்டனர். இந்த விழிப்புணர்வு மற்றும் மாதிரி வாக்கு பதிவு நிகழ்ச்சியில், விளாத்திகுளம் தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன், கிராம நிர்வாக அலுவலர் செல்வகுமார் மற்றும் ஏராளமான கிராம பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
மின்னனு வாக்குப்பதிவு இயந்திரம் குறித்து செயல்முறை விளக்க விழிப்புணர்வு மற்றும் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
விஏஓ சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்!
அடுத்த
புதிய வகுப்பறைகளை எம்எல்ஏ மார்க்கண்டேயன் பார்வையிட்டார்.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026