விளாத்திகுளத்தில் பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்த நாள் விழா: உற்சாகமாக கொண்டாடிய அதிமுகவினர்!


தமிழக முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது, பல்வேறு அரசியல் தலைவர்கள் அறிஞர் அண்ணாவிற்கு புகழஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு,விளாத்திகுளம் பகுதி அதிமுக சார்பில் மார்பளவு உள்ள எம்ஜிஆரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து அதன்பின், அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த  அறிஞர் அண்ணாவின் திருஉருவப்படத்திற்கு அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர், அதனைத்தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.



நடைபெற்ற இந்தநிகழ்வில் விளாத்திகுளம் அதிமுக  ஒன்றிய செயலாளர்கள் ராமச்சந்திரன்,மகேஷ்,பால்ராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆனந்த்,மருதுபாண்டி அதிமுக நிர்வாகிகள் வேல்முருகன்,சண்முகசாமி,ஆசைத்தம்பி, மகளிர் அணி சாந்தி உள்ளிட்டா பலர் கலந்து கொண்டனர்.