விளாத்திகுளத்தில் ஒண்டிவீரன் 255-வது நினைவு நாள் அனுசரிப்பு !


தற்போதைய தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும் சேவல் பகுதியை சேர்ந்த செல்லையாபகடை கருப்பாயின் குழந்தைகளில், 8-வது மகனான முத்துவீரன், முத்து வீரன் என்பது இவரின் இயற்பெயர் எத்தனை பேர் வந்தாலும் ஒண்டியாக நின்று சண்டையிட்டு வெல்லும் திறன் கொண்டதால் இவருக்கு ஒண்டிவீரன் என்று பெயர் வந்துள்ளது.


18-ம் நூற்றாண்டின் தலைசிறந்த மன்னனாக கருதப்பட்ட பூலித்தேவரின் படைத்தளபதியாக ஒண்டிவீரன் இருந்துள்ளார், பூலித்தேவனின் போர்வாள் என்று சொல்லக்கூடிய வகையில் ஒண்டிவீரன் ஒரு சிறப்பான படைத்தளபதியாக இருந்து வந்துள்ளார்.


1755-ம் ஆண்டு நெல்லைப்பகுதியில் வரி வசூல் செய்யும் பொறுப்பை ஆற்காடு நவாப் இடமிருந்து கிழக்கிந்திய குழுவிற்கு சென்ற நிலையில், அப்போது ஒண்டிவீரன் வீரமுழக்கமிட்டு இரண்டு குழுவையும் ஓட ஓட அடித்து விரட்டியுள்ளார்.


1757-ல் இருந்து 1759 வரை திருநெல்வேலி சீமையில் நடைபெற்ற அனைத்து போர்களிலும் ஒண்டிவீரன் தலைமையிலான படை தான் வெற்றி கண்டது.


ஒண்டிவீரனின் புகழை பறைசாற்றும் வகையில் அவரது நினைவு நாள்  அனுசரிக்கப்பட்டடும் மற்றும் பிறந்தநாளை தமிழக அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.


இதன் ஒரு பகுதியாக இன்று ஒண்டிவீரனின் 255 - வது நினைவு நாளை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு,விளாத்திகுளம் தொகுதி மாவட்ட செயலாளர் கணேசன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒண்டிவீரனின் நினைவை போற்றும் வகையில் அவரது திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அவரது வீரத்தையும், சமூகத்திற்காக ஆற்றிய பங்களிப்புகளையும் நினைவுகூர்ந்து நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில் தமிழ் புலிகள் கட்சி துணைச்செயலாளர் கருப்புராஜா, புதூர் ஒன்றிய செயலாளர் வெள்ளைவேந்தன், கிளைச்செயலாளர்கள் பால்பாண்டி, மாரிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.


சிறப்பு அழைப்பாளர்களாக அதிமுக ஒன்றிய செயலாளர் பால்ராஜ், திராவிடர் தமிழர் கட்சி மாவட்ட துணைத் தலைவர் முனியசாமி, அகில இந்திய பட்டியல் இளைஞர் அமைப்பு தலைவர் வெள்ளைச்சாமி, தாலுகா செயலாளர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஒண்டிவீரனின் நினைவுக்கு மரியாதை செலுத்தினர்.


நிகழ்ச்சியில் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.