விளாத்திகுளம் அருகே "எவ்வளவு நேரமானாலும் எல்லாரோட மனுவையும் வாங்கிகிட்டு தான் போவேன்" : சொன்னபடியே செய்த கனிமொழி எம்.பி! வெள்ளிக்கிழமை 17-11-20223 தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள காடல்குடி, சின்னூர், என்.ஜெகவீரபுரம், பூதலப்புரம், மாதலபுரம், கந்தசாமிபுரம் உள்ளிட்ட கிராமங்களில் இன்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி எம்.பி.-யின் "மக்கள் களம்" நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் உட்பட பல்வேறு துறைஅரசு அதிகாரிகள், பணியாளர்கள், கட்சியினர், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் பொது மக்களிடம் பேசிய கனிமொழி எம்.பி. "எவ்வளவு நேரம் ஆனாலும் பரவாயில்லை உங்கள் அனைவரின் கோரிக்கை மனுக்களையும் வாங்கிவிட்டுதான் செல்வேன்" என்று கூறியதோடு மட்டுமின்றி அதன்படியே இந்த "மக்கள் களம்" நிகழ்ச்சியில், பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம் மனு அளிக்க வந்திருந்த பொதுமக்கள் அனைவரிடமும் கடைசி நபரின் மனு வரை பொறுமையாக நின்று மனுக்களை பெற்றுக்கொண்டார்.
பின்னர் உடனடியாக அங்கிருந்த துறை சார்ந்த அதிகாரியிடம் மனுக்களை வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதற்கு முன்பாக அங்கிருந்த பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, மகளிர் சுய உதவி குழு கடன்கள், விவசாய இடுபொருட்கள் உள்ளிட்டவற்றைவழங்கினார்.
Vilathikulam
எவ்வளவு நேரமானாலும் எல்லாரோட மனுவையும் வாங்கிகிட்டு தான் போவேன்-சொன்னபடியே செய்த கனிமொழி எம்.பி.
Admin
1 நிமிட வாசிப்பு