எட்டையாபுரத்தில் அதிமுக சார்பில் முத்துராமலிங்கதேவரின் 119 -வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை விழா கொண்டாட்டம்!
தேசியமும் தெய்வீகமும் எனது இரண்டு கண்களாக கருதி வாழ்ந்த பசும்பொன் முத்துராமலிங்கதேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா தமிழக முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது, இதனை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் அவரின் திருவுருவ சிலைக்கும் திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் - தூத்துக்குடி சாலையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் திருவுருவ சிலைக்கு எட்டையாபுரம் அதிமுக நகர செயலாளர் ராஜகுமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது, இந்நிகழ்வில் வார்டு செயலாளர்கள் சாந்தி, செல்வி, சிவசங்கரபாண்டியன், கார்ட்டன் பிரபு, ஜெயக்குமார், வேலுச்சாமி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.