விளாத்திகுளம் சத்யா நகரில் முத்துராமலிங்க தேவரின் 119 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64வது குருபூஜை விழா!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சத்யா நகரில் முத்துராமலிங்க தேவரின் 119 ஆவது ஜெயந்தி விழா மற்றும் 64 வது குருபூஜை விழா அதிமுக நகரச் செயலாளர் மாரிமுத்து தலைமையில்  முன்னாள் அதிமுக எம்எல்ஏ என்.கே பெருமாள் முத்துராமலிங்க தேவரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.பின்பு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. 


இந்நிகழ்வில் அதிமுக ஒன்றிய செயலாளர் பால்ராஜ், அதிமுக தகவல் தொழில் நுட்ப அணி ஆனந்த், அதிமுக நிர்வாகிகள் சண்முகச்சாமி,ஆசைதம்பி, மகளிர் அணி சாந்தி, ஆறுமுகத்தாய் உட்பட நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.