தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) சார்பில் தொடங்கக்கல்வி ஆசிரியர்கள் 50க்கும் மேற்பட்டோர் மாபெரும் கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றக்கூடிய 90% ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பை பறிக்கக்கூடிய மாநில முன்னுரிமை வலியுறுத்தும் அரசாணை 243-ஐ உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும், 2023 அக்டோபர் 12ஆம் தேதி பள்ளி கல்வித்துறை அமைச்சர், பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் தொடக்க கல்வி இயக்குநர் ஆகியோர் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவுடன்(டிட்டோஜாக்) நடத்திய பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பான ஆணையினை உடனடியாக வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மு.க.இப்ராஹிம், பாலமுருகன், சுப்புராஜ் ஆகியோரும் தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பாக சேர்மக்கனி, ஜீவானந்தம், முத்துப்பாண்டி ஆகியோரும், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக இந்துராணி, தங்கக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கை விளக்கவுரை ஆற்றினார்கள்.
Vilathikulam
அரசானை No.243-ஐ ரத்து செய்யக்கோரி ஆசிரியர்கள் 50க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
7 வயது சிறுவன் கொலை வழக்கில் 19 வயது இளைஞர் கைது.
அடுத்த
சி ஐ டி யு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்.
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026