விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை காலிக்குடங்களுடன் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகை! தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எம்.குமாரசக்கனாபுரம் கிராமத்தில் கடந்த 3
மாத காலமாக கிராமத்தில்
உள்ள ஆழ்துளை கிணற்றில் போதுமான குடிநீர் கிடைக்கவில்லை என்றும், அதேபோன்று விளாத்திகுளம் கூட்டுக் குடிநீர்,
சீவலப்பேரி
கூட்டுக்குடிநீர் திட்டங்களிலிருந்து வந்துகொண்டிருந்த தண்ணீரும் கடந்த 4 மாத காலமாக இந்த எம்.குமாரசக்கனாபுரம்
கிராமத்திற்கு கிடைக்காததால் அக்கிராம
மக்கள் தொடர்ந்து பலமுறை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட
அரசுத்துறைகளிடம் பலமுறை புகார் அளித்தும் தண்ணீர் வழங்குவதற்கு எந்தவித
நடவடிக்கையும் எடுக்காததால், இன்று M.குமாரசக்கணாபுரம் கிராமத்தை சேர்ந்த ஊராட்சி
மன்ற தலைவர் உட்பட 100 க்கும் மேற்பட்ட
பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஊராட்சி
ஒன்றிய அலுவலகம் வாயில் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் வட்டார வளர்ச்சி
அலுவலர்(கி.ஊ) தங்கவேல் பேச்சு வார்த்தை நடத்தினார். அதில் கிராம மக்களிடம் ஒரு
வாரத்திற்குள்ளாக தண்ணீர் பிரச்சனையை சரி செய்து உடனடியாக குடிநீர் வழங்க ஏற்பாடு
செய்ய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து கிராம மக்கள் கலைந்து
சென்றனர்.
Vilathikulam
காலிக்குடங்களுடன் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகை!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
தமிழ் புலிகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்.
அடுத்த
குப்பைகளை முறையாக அகற்றாத தூத்துக்குடி மாநகராட்சி ?
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026