தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வரும் தனியார் அவர் லேண்ட் என்ற நிறுவனம் குப்பைகளை முறையாக அகற்றாத காரணத்தால் குப்பைகள் தேங்கி டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுநோய் பரவும் அபாயம்: உடனே மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க மாமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை.
தூத்துக்குடி மாநகராட்சியில் குப்பைகளை அகற்றும் பணியை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சியில் 60 வார்டுகளில் குப்பைகளை அகற்றும் பணியை ஒப்பந்த விதிமுறைகளை பின்பற்றாமல் சென்னையைச் சேர்ந்த அவர் லேண்ட் (our land) என்ற தனியார் நிறுவனம் எடுத்துள்ளது. இந்த நிறுவனம் சார்பில் தூத்துக்குடி மாநகராட்சியில் குப்பைகளை அகற்ற தூய்மை பணியாளர்கள் முறையாக நியமிக்கப்படாமல் குறைந்த அளவு பணியாளர்களை வைத்து வேலை செய்வதாலும் முறையாக மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து குப்பையை அகற்றும் திடக்கழிவு மேலாண்மையை கடைப்பிடிக்காததாலும் தூத்துக்குடி மாநகரின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் அல்ல படாமல் கொட்டிக் கிடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் கொசு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி கூட்டத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் புகார் தெரிவித்தும் மாநகராட்சி நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்படுகிறது. எனவே மாநகராட்சி நிர்வாகம் இந்த விஷயத்தில் அலட்சியம் காட்டாமல் உடனடியாக தலையிட்டு தூத்துக்குடி மாநகரில் குப்பைகளை அகற்ற முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் தனியார் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு மாநகராட்சி நிர்வாகமே தூய்மை பணியாளர்களை நியமனம் செய்து குப்பைகளை முறையாக அள்ள வேண்டும் என மாநகராட்சி அதிமுக கொறடா வழக்கறிஞர் மந்திரமூர்த்தி தெரிவித்தார்.
தூத்துக்குடி
குப்பைகளை முறையாக அகற்றாத தூத்துக்குடி மாநகராட்சி ?
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
காலிக்குடங்களுடன் 100-க்கும் மேற்பட்டோர் முற்றுகை!
அடுத்த
அஇஅதிமுக பூத் கமிட்டி விண்ணப்பம் நிரப்பும் பணிகள் தீவிரம்!
இதையும் படிக்கலாம்
54 ஆண்டுகளாக நீளும் கண்ணீர்க் கதை.! பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த கணவருக்கு நஷ்டஈடு, பென்சன் கேட்டு 85 வயது மூதாட்டி போராட்டம்.!
17 Aug 2026
லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் நடத்திய சோதனையில் குடிமை பொருள் வழங்கல் பிரிவில் கணக்கில் வராத 22,900 ரூபாய் பறிமுதல்!
17 Jul 2026
ஸ்ரீ பவானீஸ்வரர் திருக்கோவிலில் , விமர்சையாக நடைபெற்ற "ஆனி மாத பிரதோஷ வழிபாடு" : ஏராளமான பக்தர்கள் சிவநாமம் பாடி வழிபாடு!
12 Jul 2026
ஆனி மாத தேய்பிறை பிரதோஷ வழிபாடு!
12 Jul 2026