தூத்துக்குடி
மாவட்டம் விளாத்திகுளம் அருகேசிந்தலக்கரையில் உள்ள தனியார் பள்ளியில் “ பாலித்தீன் பையை ஒழிப்போம் மஞ்சப்பையை காப்போம்”
என்ற தலைப்பில் விழிப்புணர்வு யோகா நிகழ்ச்சி
நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு யோகாசன நிகழ்ச்சியை கோவில்பட்டி ஆதிதிராவிடர்
நலத்துறை தாசில்தார் ராஜ்குமார் பள்ளி மேலாண்மை இயக்குனர் திருக்குமரன் ஆகியோர்
தொடங்கி வைத்தனர். இதில் ஆர்வமுடன் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு யோகாசனங்களை
செய்து காண்பித்து அசத்தினர்.
இதையடுத்து உலக
சாதனை நிகழ்த்தும் வகையில் 4 வயது
உட்பட்டோருக்கான பிரிவில் கார்த்திக் கிருஷ்ணா, பூஜா, சாதனா ஆகிய மாணவ - மாணவிகள் பேப்பர் கப் மீது அமர்ந்து பாலித்தீன்
பையை ஒழிப்போம் மஞ்சப்பை காப்போம் என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி கையில் மஞ்சப்பை
வைத்து கொண்டு யோகாசனம் செய்து
அசத்தினர். யோகாசனம் செய்து அசத்திய மாணவ-
மாணவிகளுக்கு பரிசு பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது. மேலும் பாலித்தீன் பையை
ஒழிப்போம் என்பதை வலியுறுத்தி பள்ளி மாணவ மாணவிகள் ஆசிரியர்கள் அனைவரும் உறுதிமொழி
ஏற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில்
சாய் தேவ் தொண்டு நிறுவனர் சைலஜா, பள்ளி முதல்வர் வீரலட்சுமி , சுவாமி விவேகானந்தா யோகா மற்றும் ஸ்கேட்டிங்
கழக நிறுவனர் சுரேஷ்குமார் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவ - மாணவர்கள் உள்ளிட்ட
திரளானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
பேப்பர் கப்பின் மீது அமர்ந்து யோகா செய்து அசத்தல்!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
துணை சுகாதார மையம் கட்டிடப் பணியை MLA மார்க்கண்டையன் தொடங்கி வைத்தார்.
அடுத்த
புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தை எம்எல்ஏ மார்க்கண்டயேன் திறந்து வைத்தார்.
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026