திமுக ஆட்சியில் அவசர அவசரமாக தொடங்கப்பட்ட பணிகளை முறையாக ஆய்வு செய்த பின்னே மீண்டும் செயல்படுத்தப்படும் அமைச்சர் ஸ்ரீநாத் விளாத்திகுளத்தில் பேட்டி!
மீனவ பெண்களுக்கு சிறுகுரு தொழில் தொடங்க ஏற்பாடு செய்யப்படும்...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ரூபாய் 60 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட நான்கு வகுப்பறைகளை திறக்க வந்த அமைச்சர் ஸ்ரீநாத் பள்ளி சிறுவர் சிறுமிகளிடம் உற்சாகத்துடன் கை கொடுத்த பின்பு புதிய வகுப்பறை கட்டிடங்களை ரிப்பன் வெட்டி,குத்து விளக்கு ஏற்றி திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஸ்ரீநாத்,கடந்த திமுக அரசு ஆட்சியின் இறுதி கட்டத்தில் மீன்வளத்துறையில் அவசர அவசரமாக தொடங்கப்பட்டு தற்போது கிடப்பில் போட்ட கோடிக்கணக்கான ரூபாய் திட்ட பணிகளை, மீனவர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் இணைந்து ஆலோசித்து அந்தப்பகுதிக்கு ஏற்றவாறு, மீனவர்கள் பயன்படும் வகையில் திட்டம் அமைய வேண்டும் என்பதற்காக காத்திருந்து பணிகளை தொடங்க உள்ளோம் என்றும், மீனவபெண்களுக்கு மீன்வளம் சம்பந்தமான பயிற்சி மற்றும் சிறுகுறு தொழிலுக்கான ஏற்பாடுகளை தற்போது தமிழக அரசு செய்ய உள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தாசில்தார் அந்தோணி ஜெபராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், தமிழக வெற்றி கழக மாவட்டச் செயலாளர் மகேஸ்வரன், மாவட்ட இணை செயலாளர் பொன்காசிராம், மாவட்டத் துணைச் செயலாளர் எபநேசர், நகரச் செயலாளர் முத்துராமலிங்க சேதுபதி, ஒன்றிய செயலாளர்கள் விஜயகுமார், தங்க மாரியப்பன், செண்பக கனி. மற்றும் நகர நிர்வாகிகள், வார்டு செயலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.