தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில், வருவாய் துறையினர் சார்பில் தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு முகாம்கள், பேரணிகள் என பொதுமக்களிடையே வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இன்று "தேர்தல் பருவம் ; தேசத்தின் பெருமிதம்" எனும் தலைப்பில் விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் தலைமையிலும், தேர்தல் துணை வட்டாட்சியர் பாலமுருகன் முன்னிலையிலும் மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் தமிழ் நர்சிங் கல்லூரி மற்றும் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள், விளாத்திகுளம் வருவாய்துறை அதிகாரிகள், அலுவலர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். விளாத்திகுளம் ஆற்றுப்பாலத்திலிருந்து துவங்கிய இப்பேரணியை விளாத்திகுளம் வட்டாட்சியர் இராமகிருஷ்ணன் கொடியசைத்து துவக்கிவைத்தார். கல்லூரி மாணவர்கள் வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கைகளில் ஏந்தியவாறு தப்பு தாளங்கள் முழங்க நடைபெற்ற இப்பேரணியானது எட்டையபுரம் ரோடு, பேருந்து நிலையம், மதுரை ரோடு, கீழரத வீதி, காய்கறி மார்க்கெட் வழியாக வட்டாட்சியர் அலுவலகத்தில் முடிவுற்றது. மேலும் இப்பேரணியில் மாணவர்கள் வாக்களிப்பதன் அவசியம் பற்றியும், வாக்குரிமை என வாக்காளர்கள் விழிப்புணர்வு அடங்கிய துண்டு பிரசுரங்களை வழிநெடுகிலும் இருந்த பொதுமக்களுக்கு வழங்கியும், கோஷமிட்டும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இந்த விழிப்புணர்வு பேரணியில், விளாத்திகுளம் வட்ட வழங்கல் அலுவலர் மாரிமுத்து, வருவாய் ஆய்வாளர் ராணி, முதுநிலை வருவாய் ஆய்வாளர் (தேர்தல் பிரிவு) பாலமுருகன், ராஜ்குமார் உட்பட வருவாய்த்துறை அலுவலர்கள், கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Vilathikulam
கல்லூரி மாணவர்கள் சார்பில் மாபெரும் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
பேவர் பிளாக் சாலை அமைக்கும் பணியை அதிமுக யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
அடுத்த
தலைவர்களுக்கு மரியாதை செலுத்திய தூத்துக்குடி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ரொவினா ரூத் ஜென்!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026