விளாத்திகுளம் அருகே அரசு அதிகாரிகளின் துணையுடன் 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசால் தடை செய்யப்பட்ட நாட்டுக்கருவேல மரங்கள் வெட்டி கடத்தல்!



அரசு அதிகாரிகளுக்கு புகார் கொடுத்தும் புகாரை அலட்சியப்படுத்தியதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள செங்கோட்டை மற்றும் பட்டித்தேவன்பட்டி ஆகிய இரு கிராமங்களுக்கும் பத்தியப்பட்ட சுமார் 280 ஏக்கர் பரப்பளவில் கிராம பஞ்சாயத்து கண்மாய் உள்ளது, இக்கம்மாயில் உள்ள சீமை கருவேல மரங்களை  வெட்டுவதற்கு இரு கிராமங்களை சேர்ந்த மக்களிடம் அரசு ஒப்பந்தம் கேட்பது வழக்கம்,அப்படி அரசால் ஒப்பந்தம் கேட்கப்பட்டு அரசு உண்டான தொகையை செலுத்திய பின் சீமை கருவேல மரங்களை வெட்டுவது வழக்கம்,இந்த நிலையில் செங்கோட்டை மற்றும் பட்டித்தேவன்பட்டி ஆகிய இரு கிராம மக்களிடம் அரசு சார்பில் எந்த ஒரு ஒப்பந்த கோரிக்கையும் கேட்காமல்,வேறு பகுதியை சேர்ந்த ஒரு சிலர் அரசு அதிகாரிகளின் துணையுடன் சீமை கருவேல மரங்களை வெட்டுவது மட்டுமல்லாமல் அரசால் தடை செய்யப்பட்ட நாட்டு கருவேல மரங்களையும் வெட்டி கடத்தி வந்துள்ளனர், இதனை அடுத்து தகவல் அறிந்த செங்கோட்டை மற்றும் பட்டித்தேவன்பட்டி இரு கிராமங்களை சேர்ந்த மக்கள் நேற்று உரிய அனுமதியில்லாமல் இப்பகுதியில் மரங்களை வெட்டக்கூடாது என்று, வாகனங்களை மறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு அரசு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.




இந்த நிலையில் இன்று காலை தொடர்ந்து அதே கண்மாயில் இன்று அரசு அதிகாரிகளின் துணையுடன் வேலையாட்களை வைத்து சீமைகருவேல மரங்கள் மற்றும் நாட்டுக் கருவேல மரங்களை வெட்டி கடத்தும் முயற்சியில் ஈடுபட்டபோது கிராம மக்கள் வாகனங்களை வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இதுகுறித்து புதூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகுமார் மற்றும் தனலட்சுமி ஆகிய இருவருக்கும் தகவல் தெரிவித்தும் சம்பவ இடத்திற்கு வருகிறேன் வருகிறேன் என்று கூறியவர்கள் கடைசி வரை வரவில்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.



இது குறித்த கிராம மக்கள் கூறுகையில் விவசாயிகளுக்கு தொல்லை கொடுத்து வரும் மான்கள் மற்றும் பன்றிகள் இருப்பிடமாக உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றம் மட்டுமே அரசு உத்தரவிட்டுள்ளது,நாட்டுகருவேல மரங்களை வெட்ட எந்த அரசும் உத்தரவு பிறப்பிக்கவில்லை, அரசுக்கு சுமார் 30 லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அக்கிரம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.



இந்த சட்டவிரோதமாக நாட்டுக்கருவேல மரங்களை வெட்டி  அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது குறித்து, வட்டார வளர்ச்சி அலுவலர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அவர்கள் தொலைபேசியை எடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.