விளாத்திகுளத்தில் கோவில் கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் மாட்டு வண்டி எல்லை பந்தயம் : சீறிப்பாய்ந்த 58 ஜோடி மாடுகள்!



போட்டியில் வெற்றி பெற்ற வெற்றியாளர்களுக்கு ரொக்கப்பணம் மற்றும் வெற்றி கோப்பை வழங்கி கௌரவிப்பு!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் கேசவன் நகர் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாகாரப்பன்,ஸ்ரீ நாகம்மாள்,ஸ்ரீ கருப்பசாமி,ஸ்ரீ செல்வவிநாயகர் திருக்கோவில் ஆடி மாத கொடை விழாவை முன்னிட்டு மாபெரும் இரண்டாம் ஆண்டு மாட்டுவண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது.



பூஞ்சிட்டு, தேன்சிட்டு என இரு பிரிவுகளாக நடைபெற்ற போட்டியில் திருநெல்வேலி,மதுரை,விருதுநகர், ராமநாதபுரம்,தூத்துக்குடி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 58 ஜோடி மாடுகள் போட்டியில் கலந்து கொண்டு இலக்கை நோக்கி சீறிப்பாய்ந்தன.



போட்டியானது விளாத்திகுளம் – வேம்பார் சாலையில் நடைபெற்றது, பூஞ்சிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயத்திற்கு போக வர 5 மைல் தூரமும், தேஞன்சிட்டு பந்தயத்திற்கு 4 மைல் தூரமும்  நிர்ணயிக்கப்பட்டு போட்டியானது நடைபெற்றது.



போட்டியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர் மற்றும் ஓட்டி வந்த சாரதிகளுக்கு விழா கமிட்டியின் சார்பாக ரொக்கப்பணம் மற்றும், வெற்றிகோப்பை வழங்கி கௌரவிக்கப்பட்டது, இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் சாலையின் இரு புறமும் நின்று பொதுமக்கள் மற்றும் பந்தைய ரசிகர்கள் போட்டியை ஆர்வத்துடன்  கண்டு ரசித்தனர்.


நடைபெற்ற இந்த மாபெரும் மாட்டு வண்டிகள் பந்தயத்தினை  திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, தொழிலதிபர் காண்டீபன், தமிழக ஏர் உழவன் அனைத்து விவசாய சங்கதலைவர் ராஜேஷ், விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் சடையாண்டி, மாட்டு வண்டி கணேசன் மற்றும் விழாக்கமட்டியினர் உள்ளிட்ட பலர் போட்டியை தொடங்கி வைத்து பரிசுகளை வழங்கினர்.