விளாத்திகுளத்தில் தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் 8-ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு!




தமிழக முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி 8-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியினர் தமிழக முழுவதும் கலைஞர் கருணாநிதியின் நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் கலைஞர் கருணாநிதியின் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி,அமைதி ஊர்வலம் நடத்தி மரியாதை செலுத்தி வருகின்றனர்.



இதன் ஒருபகுதியாக திமுக வடக்கு மாவட்டசெயலாளர் கீதாஜீவன் அறிவுறுத்தலின்படியும்,விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டயேனின் ஆலோசனையின் படியும் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு வைக்கப்பட்டிருந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் திருவுருவப்படத்திற்கு  திமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


இந்நிகழ்வில் விளாத்திகுளம் மத்திய ஒன்றிய செயலாளர் ராமசுப்பு, விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னமாரிமுத்து, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீதர்,விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி சமூக வலைதள அணி ஒருங்கிணைப்பாளர் கரண்குமார் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.