விளாத்திகுளம் அருகே “ வீ த லீடர்ஸ் ” அமைப்பு சார்பில் கண் சிகிச்சை முகாம்!


தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள படர்ந்தபுளி கிராமத்தில் கடம்பூர் அருண் ராஜா அறிவுறுத்தலின்படி “ வீ த லீடர்ஸ் ” (We The Leaders) அமைப்பு மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை சார்பில்  இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.


மருத்துவர் ஷேக் அப்துல்லா தலைமையிலான மருத்துவ குழுவினர் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு கண் சிகிச்சை வழங்கினார்கள். மேலும் 5 நபருக்கு மேல் சிகிச்சைக்காக பரிந்துரைக்கப்பட்டனர்.

இந்தமுகாமில் வீ த லீடர்ஸ் உறுப்பினர்கள் அஸ்வின், காட்டுராஜா, அருணாச்சலம், வெங்கடேஷ் ,பொன்ராஜ், சுப்புராம், சரண்ராஜ்,சுபாஷ் மற்றும் சுற்றுவட்டார பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.