விளாத்திகுளம் அருகே படித்த பள்ளியை தத்தெடுத்த முன்னாள் மாணவர்கள் : கலையிழந்த பள்ளியை ரூ.50 லட்சம் மதிப்பில் கலர்புல்லாக மாற்றி அசத்தல்: நூற்றாண்டு விழாவிற்கு whatsapp குழுவில் வரவேற்பு!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள குளத்தூரில், இயங்கி வரும் இந்து நாடார் நடுநிலைப்பள்ளி கடந்த 1923-ஆம் ஆண்டு துவங்கப்பட்டு தற்போது வரை சிறப்பாக நடைபெற்று வருகிறது. இப்பள்ளியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடுவதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பு இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் திட்டமிட்டு பள்ளிக்கு நேரில் சென்றுள்ளனர்.
ஆனால் அங்கு சென்ற முன்னாள் மாணவர்களுக்கு தாங்கள் படித்த பள்ளியின் நிலையைக் கண்டு பெரும் மனச்சோர்வும், வருத்தமும் ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளியின் அடிப்படையை வசதிகளை கட்டமைத்தும், பள்ளிக்கும், அங்கு பயலும் மாணவர்களுக்கும் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்று முடிவு செய்து... இதுவரை பயின்ற அனைத்து மாணவர்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு தங்களுக்குள்ளாக வாட்ஸ்அப் குழுவினை உருவாக்கி அனைவரும் தாங்கள் படித்த பள்ளியை தத்தெடுத்து லட்சக்கணக்கில் நிதியை அளித்து தற்போது இந்த இந்து நாடார் நடுநிலைப்பள்ளியில் சேதமடைந்திருந்த கட்டிடங்கள் சீரமைக்கப்பட்டு, பல ஆண்டுகளாக கலையின்றி காணப்பட்ட பள்ளி கட்டிடங்கள் முழுவதற்கும் பெயிண்ட் செய்து கலர்ஃபுல்லாக மாற்றியுள்ளனர் ,
இந்த முன்னாள் மாணவர்கள். அதுமட்டுமின்றி இப்பள்ளிக்கு ஸ்மார்ட் வகுப்பறை, குடிநீர் வசதி, மைதானம், சுற்றுச்சுவர் கட்டிடம், முகப்பு வாயில் என அனைத்தையும் பிரம்மாண்டமாக உருவாக்கி வருகின்றனர். மேலும், நூற்றாண்டு விழா கொண்டாடத் திட்டமிட்டு வந்த முன்னாள் மாணவர்கள் பள்ளியின் நிலையை கண்டு தங்களுக்குள்ளாகவே நிதியைத் திரட்டி ரூ.50 லட்சம் மதிப்பில் பள்ளியை சீரமைத்து அசத்தியுள்ளனர். அதேபோன்று வருகின்ற அக்டோபர் மாதம் 15 ஆம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ள பள்ளியின் நூற்றாண்டு விழாவில் பல்லாயிரக்கணக்கான முன்னாள் மாணவர்களை வருகை தர வைத்து மிகச் சிறப்பாக கொண்டாட திட்டமிட்டுள்ளதாக பள்ளியில் படித்த முன்னாள் மாணவர் பேச்சிமுத்து தெரிவித்துள்ளார்.
Vilathikulam
படித்த பள்ளியை தத்தெடுத்த முன்னாள் மாணவர்கள் -நூற்றாண்டு விழாவிற்கு whatsapp குழுவில் வரவேற்பு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
"ஆவணிமாத வளர்பிறை பிரதோஷ வழிபாடு"
அடுத்த
ரூ.2 கோடி மதிப்புள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்திற்கு சொந்தமான நிலம் மீட்பு!
இதையும் படிக்கலாம்
காமராஜரின் 124-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு பரிசுப்பொருட்களை வழங்கிய DSP-க்கள்!
02 Aug 2026
15 ஆண்டுகளாக குடிநீர் இல்லாமல் தவிக்கும் கிராம மக்கள்: ஆட்சியாளர்கள் மாறினாலும் குடிநீர் பிரச்சனை தீரவில்லை !
02 Aug 2026
50 அடி ஆழமுள்ள கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிய இளம் பெண்ணை துரிதமாக செயல்பட்டு உயிருடன் மீட்ட தீயணைப்புத் துறையினர்!
01 Aug 2026
5 கிலோ மீட்டர் சாலையை கடக்க 1/2 மணி நேரமாகும் போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை!
01 Aug 2026