பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எட்டையாபுரம் பேரூராட்சி நிர்வாகம்:பேரூராட்சி நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கும் எட்டயபுரம் வியாபாரி சங்கம்!



தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் ஆட்டுச்சந்தை தமிழகத்தின் புகழ்பெற்ற ஆட்டுச்சந்தைகளின் ஒன்றாகும், இந்த ஆட்டுச்சந்தைக்கு திருநெல்வேலி,இராமநாதபுரம்,மதுரை,தேனி,கம்பம்,கன்னியாகுமரி, சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வாரந்தோறும் நடைபெறும் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் வியாபாரிகள் ஆடுகளை விற்பதற்கும் வாங்குவதற்கும் வருவது வழக்கம்.



குறிப்பாக தீபாவளி,பொங்கல்,பக்ரீத்,ரம்ஜான்,கிறிஸ்துமஸ் ஆகிய  பண்டிகை நாட்களில் எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில்   கோடிக்கணக்கில் வியாபாரம் நடைபெறுவது வழக்கம், இதனால் எட்டையாபுரம் பேருந்து நிலையம் மற்றும் எட்டையாபுரம் சந்தைபகுதிகளில் அதிகமான பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் கூடுவது வழக்கமான ஒன்றாகும், இந்தநிலையில் வருகின்ற நவம்பர் 8-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தீபாவளி பண்டிகை வரவுள்ளது, எட்டையாபுரம் ஆட்டுச்சந்தை வழக்கமாக வெள்ளி மற்றும் சனிக்கிழமை நடைபெறும், அவ்வாறு தீபாவளிக்கு முதல் நாள் ஆட்டுச்சந்தை நடைபெறுவதால், எட்டயபுரம் பேருந்து நிலையம் மற்றும் பஜார் பகுதிகளில் அதிகமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரும் சூழ்நிலை ஏற்படும்,இதனால் பெரிதும் போக்குவரத்து நெரிசலும் ஏற்படும்,இந்தபோக்குவரத்து நெரிசலின் காரணமாக எட்டையாபுரம் ஆட்டுச்சந்தைக்கு வருபவர்களும் பாதிக்கப்படுவார்கள் அதேபோல், எட்டையாபுரம் நகர் பகுதியில் உள்ள வியாபாரிகளுக்கும் பெரிய அளவு பாதிப்பு ஏற்படும், எனவே பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு தீபாவளியை முன்னிட்டு நடைபெற உள்ள ஆட்டுச்சந்தையை  வருகின்ற நவம்பர்-4 மற்றும் 5-ம் தேதிகளில் நடத்த வேண்டும் என்று கடந்த 06-10-2026 தேதியன்று எட்டையாபுரம் வர்த்தகர்கள் சங்கம் சார்பில் எட்டையாபுரம் பேரூராட்சி அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.



அந்த மனுவை மதிக்காத எட்டையாபுரம்  பேரூராட்சி நிர்வாகம் வழக்கம்போல் வருகின்ற நவம்பர் 6 மற்றும் 7ஆம் தேதிகளில் ஆட்டுச்சந்தை நடத்தப்படும் என்பதை தெரிவித்ததாக கூறப்படுகிறது.


 இதனை எட்டையாபுரம் வர்த்தக சங்கத்தினர் வன்மையான கண்டனத்துக்கு ஊறியது என தெரிவித்துள்ளனர்.



தீபாவளி,பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களை முன்னிட்டு எட்டயபுரம் ஆட்டுச்சந்தையில் சிறப்பு சந்தை நடைபெற்று வந்தது குறிப்பிடத்தக்கதாகும்.