விளாத்திகுளத்தில் திமுக சார்பில்  முத்துராமலிங்க தேவரின் 119 - வது ஜெயந்தி விழா மற்றும் 64 - வது குருபூஜை விழா!



தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவரின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64 வது குருபூஜை விழாவை முன்னிட்டு விளாத்திகுளம் பாரதியார் பேருந்து நிலையம் முன்பு அமைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கும்,சத்யா நகரில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கும்,விளாத்திகுளம் தேவர் மகாஜன சங்க கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவுருவப்படத்திற்கும் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


இந்தநிகழ்வில் விளாத்திகுளம் வட்டார தேவர் மகாஜன சங்கத் தலைவர் சக்திவேல் பாண்டியன், பொருளாளர் முத்துராமலிங்கம்,செயலாளர்கள் மாரியப்பன்,பிச்சையா முன்னாள் தலைவர் சுப்பிரமணியன், பொன்பாண்டியன்,  திமுக ஒன்றிய செயலாளர்கள் ராமசுப்பு, சின்னமாரிமுத்து, அன்புராஜன் இமானுவேல், ராதாகிருஷ்ணன்,  விளாத்திகுளம் பேரூர் கழக செயலாளர் வேலுச்சாமி, விளாத்திகுளம் பேரூராட்சி மன்ற தலைவர் சூர்யா அய்யன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராஜாக்கண்ணு, விளாத்திகுளம் பேரூர் கழக நிர்வாகிகள் சின்னத்துரை, கருப்பசாமி தகவல் தொழில் நுட்ப அணி ஸ்ரீதர்,பாலகணேஷ், காளிதாஸ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.