விளாத்திகுளம் அருகே கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்களின் முளைப்பாரி ஊர்வலம்!
மாரி மழை பெய்து விவசாயம் செழிக்க "நாக்கில் சூடம் ஏற்றி" முளைப்பாரி ஊர்வலத்தை தொடங்கி வைத்த பக்தர்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள ரகுராமபுரம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து மாலை ஊர் சமுதாய நலக்கூடத்தில் வழங்கப்பட்ட முளைப்பாரிகளை, முளைப்பாரி வளர்க்கும் பக்தர் ஒருவர் மாரி மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டியும், மண் வளம் பெருகவும் நாக்கில் சூடம் ஏற்றி வழிபாடு நடத்தி முளைப்பாரி ஊர்வலத்தை தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து சமுதாய நலக்கூடத்தில் இருந்து எடுத்துவரப்பட்ட முளைப்பாறியை சோலையம்மன்கோவில், சந்தியம்மன்கோவில், காளியம்மன்கோவில், கருப்பசாமி கோவில் உள்ளிட்ட கோவில் வளாகங்களில் வைத்து முளைப்பாறியை சுற்றி பெண்கள் கும்மி பாட்டு பாடி வழிபாடு நடத்தினர்.
அதனைத்தொடர்ந்து ஊர்வலமாக எடுத்துவரப்பட்ட முளைப்பாறியை கிராமத்தில் உள்ள நீர் நிலையில் கரைத்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தி முடித்தனர்.