CPIM - கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் : சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட CPIM கட்சியினர் கைது!
1.விவசாயிகளைப் பாதிக்கும் இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தத்தை ரத்து செய்யக் கோரியும்.
2. விவசாய விளைப் பொருள்களுக்கு எம் எஸ் சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைப்படி கட்டுப்படியான விலை வழங்கிடு...
3.விவசாயிகள் பெற்றுள்ள அனைத்து கடன்களையும் முழுமையாக தள்ளுபடி செய்ய...
4.100 நாள் வேலை திட்டத்தில் அனைவருக்கும் 200 நாள் வேலையையும் ரூபாய் 700 சம்பளமும் வழங்க...
5. தொழிலாளர்கள் உரிமையை பறிக்கும் நான்கு தொகுப்பு சட்டங்களை ரத்து செய்யக்கோரி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து விவசாயிகள் மற்றும் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் நாடு தழுவிய அளவில் நடைபெறும் மறியல் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற இருந்தது, இதற்காக ஏராளமான CPIM கட்சியினர் எட்டையாபுரம் சாலையில் இருந்து கோசமிட்டபடி பேரணியாக விளாத்திகுளம் பேருந்து நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்தபோது, போலீசார் அவர்களை சத்தம் போடாமல் வாருங்கள் என்று கூறியதால் ஆத்திரமடைந்த CPIM கட்சியினருக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு லேசான தள்ளுமுள்ளாக மாறியது, இதனைத் தொடர்ந்து விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட CPIM கட்சியினரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.
இந்நிகழ்வில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு விவசாய சங்கத்தினுடைய மாவட்டச் செயலாளர் புவிராஜ், இந்திய தெழிற்சங்க மையம் ஜோதி, ராமர் , சூசைராஜ், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் (சிபிஐ) மாவட்ட பொருளாளர் பிச்சை, ஏஐகேஎம் சார்பில் சண்முகம் பெருமாள், விவசாயிகள் சங்க மாவட்ட துணைசெயலாளர் செல்வராஜ், விளாத்திகுளம் தாலுகா செயலாளர் மலைக்கனி, பொருளாளர் மகாராஜன் நிர்வாகிகள் ராமலிங்கம், அமிர்தராஜ், பத்மாவதி, அமுதா, செல்வி, விவசாய தொழிலாளர் சங்கம் தாலுகா செயலாளர் முத்து மல்லம்மாள் மாவட்ட குழு உறுப்பினர் ஜெயலட்சுமி உள்ளிட்ட மறியலில் ஈடுபட்ட 10 பெண்கள் உட்பட 46 பேர் கைது செய்யப்பட்டனர்.