சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோவிலில் காளிபராசக்திக்கு ஆடிப்பூர வளைகாப்பு விழா!
குழந்தை இல்லாத தம்பதியினர் வெட்காளியம்மன் கோவில் வளாகத்தில் சிறப்பு பரிகாரம்!
தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் அருகே உள்ள சிந்தலக்கரை ஸ்ரீ தர்காளியம்மன் கோவில் காளிபராசக்தி பீடத்தில் ஆடிபுரத்தை முன்னிட்டு காளிபராசக்திக்கு அதிகாலை 4 மணி அளவில் மஞ்சள்,இளநீர்,பால்.சந்தனம்,தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது, அதனைத் தொடர்ந்து வேப்பிலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு காளிபராசக்தி காட்சியளித்தார், பின்னர் காலை 7:20 மணி அளவில் வண்ண மலர்களால் மாலை அணிவிக்கப்பட்ட காளிபராசக்திக்கு பல்வேறு வகையான வண்ண வளையல்களால் மாலை அணிவிக்கப்பட்டு அலங்கார தீபாதாரணை காண்பிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து வெட்காளியம்மனுக்கு 50 ரூபாய் மாலை,எலுமிச்சைமாலை,மலர் மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாதாரனை நடைபெற்றது.
ஆடிப்பூரத்தை முன்னிட்டு இன்று ஸ்ரீ வெட்காளியம்மன் கோவில் வளாகத்தில் குழந்தை இல்லாத தம்பதியினர் வெக்காளியம்மன் முன்பு அமர்ந்து வளையல்,சந்தனம்,குங்குமம்,இனிப்பு பலகாரம் ஆகியவற்றை வைத்து பரிகாரபூஜை நடத்தினர்.
இன்று ஆடிப்பூரம் மற்றும் ஆடி கடைசி வெள்ளி என்பதால் தமிழகம் முழுவதும் இருந்து சுமார் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிந்தலக்கரை வெட்காளியம்மன் கோவிலுக்கு வந்து சிறப்பு வழிபாடு நடத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.