விளாத்திகுளத்தில் மாமன்னர் ராஜராஜ சோழனின் 1041-ம் ஆண்டு சதய விழா கொண்டாட்டம்!



மாமன்னர் ராஜ ராஜ சோழன் பிறந்த மற்றும் அரியணை ஏறிய ஐப்பசி சதய நட்சத்திரத்தை சதய விழாவாக இரண்டு நாட்கள் கொண்டாடுவது வழக்கம், அதனை முன்னிட்டு ராஜராஜ சோழனின் 1041 - வது சதய விழா தஞ்சை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.


இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் பேருந்து நிலையம் முன்பு முன்பு வாதிரியார் சமுதாயம் சார்பாக  அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த  சோழப்பேரரசர் முப்பாட்டன் ராஜராஜ சோழனின் 1041-வது சதய விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.


இதில் சிறப்பு விருந்தினராக விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.



இவ்விழாவினை குணசேகரவாதிரியார் மற்றும் சுப்பிரமணிதேவர் ஆகியோர் தலைமை தாங்கி நடத்தினர், இந்நிகழ்வில் முனியசாமி வாதிரியார் தங்கச்சாமி வாதிரியார்,பரமசிவதேவர்,மாலினி,மாரியம்மாள், சுப்ரமணியவாதிரியார்,பூவாதிரிசோழர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.