தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள எட்டயபுரத்தைச் சேர்ந்த முத்தையா என்ற 73 வயது முதியவர் நேற்று முன்தினம் மாலை சுமார் 7 மணி அளவில் எட்டயபுரத்தில் இருந்து கீழே இறாலுக்கு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். செல்லும் வழியில் இரு சக்கர வாகனத்தின் டயர் பஞ்சர் ஆனதால் வாகனத்தை தள்ளிக் கொண்டு கீழ ஈரால் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது பவர் கிரேட் அருகில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபன் ஒருவன் முத்தையாவிடம் போன் செய்ய வேண்டும் என்று செல்போனை கேட்டுள்ளான்.. ஆனால் முதியவர் முத்தையா செல்போனை தராமல் கொடுக்க மறுத்துவிட்டு தொடர்ந்து சென்றுள்ளார். அப்போது திடீரென அந்த அடையாளம் தெரியாத நபர், தான் வைத்திருந்த கத்தியை எடுத்து முதியவரின் தலையில் வெட்டி விட்டு ரூ.11,000 மதிப்புள்ள முத்தையாவின் புதிய சாம்சங் செல்போனை பிடுங்கி தப்பி ஓடியுள்ளான். இதையடுத்து தலையில் காயமடைந்த முதியவர் முத்தையா எட்டயபுரம் காவல் நிலையத்திற்கு சென்று இது குறித்து புகார் அளித்துள்ளார். முதியவரின் புகாரின் பேரில் முத்தையாவின் செல்போனை பறித்துச் சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
Vilathikulam
தேசிய நெடுஞ்சாலையில் சென்ற முதியவரை கத்தியால் தாக்கி செல்போன் பறிப்பு!
Admin
1 நிமிட வாசிப்பு
முந்தைய
கோவில்பட்டி வட்டார ஸ்ரீராகவேந்திரா அறக்கட்டளை 2-ம் ஆண்டு விழா!
அடுத்த
ஆடி அமாவாசையை" முன்னிட்டு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் முன்னோர்களுக்கு திதிகொடுத்து வழிபாடு!
இதையும் படிக்கலாம்
தான் ஒரு திமுக எம்.எல்.ஏ என்பதால் அரசு அதிகாரிகள் எனது தொலைபேசியை எடுப்பதில்லை என விளாத்திகுளம் எம்.எல்.ஏ மார்க்கண்டயேன் குற்றச்சாட்டு!
21 Sep 2026
இளம் பெண்ணுக்கு தொடர்ந்து தொந்தரவு கொடுத்த தவெக நிர்வாகியின் சகோதரர்:தமிழக வெற்றிக்கழக நகரச்செயலாளர்,விடுதலை சிறுத்தைகட்சி நிர்வாகி,திமுக நிர்வாகி உள்ளிட்ட நான்கு பேர் தலைமறைவு!
20 Sep 2026
வெற்றியாளருக்கு 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் LED டிவிகள் பரிசு வழங்கி கௌரவிப்பு!
20 Sep 2026
அமைச்சர் பெயர் மற்றும் புகைப்படம் பிளக்ஸ் போர்டில் இல்லாததால் மாட்டுவண்டி பந்தயத்திற்கு நெருக்கடி கொடுத்த காவல்துறை!
19 Sep 2026