விளாத்திகுளம் அருகே கூலித்தொழிலாளி இளைஞர் தூக்கிட்டு தற்கொலை...
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள புதூர்-புதுகாலனி பகுதியை சேர்ந்த காளிமுத்து என்பவரின் மகன் ஜெயராம் (21), இவர் கூலி தொழில் செய்து வந்துள்ளார், இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது, ஜெயராம் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாத காரணத்தினால் அவரது பெற்றோர்கள் சத்தம் போட்டதாகவும், இதனால் மன வருத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் மன வருத்தத்தில் இருந்து வந்த ஜெயராம் இன்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவல் அறிந்த புதூர் காவல் நிலைய போலீசார், ஜெயராம் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கூலித்தொழிலாளி இளைஞர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.